டாடா, ஹூண்டாய்லாம் ஓரமா போய் விளையாடுங்க! 31 கிமீ மைலேஜ் தர்ற விலை குறைவான மாருதி காரை வாங்க கூட்டம் அலைமோதுது
இந்திய சந்தையில் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக காரை வாங்குபவர்களின் முதல் தேர்வு அனேகமாக மாருதி சுஸுகி பலேனோவாகதான் (Maruti Suzuki Baleno) இருக்கும். மாருதி சுஸுகி பலேனோ கார் இந்திய சந்தையில் கடந்த 2015ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது நடந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இன்றளவும் இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி பலேனோ திகழ்ந்து வருகிறது.
நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாருதி சுஸுகி பலேனோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) இந்த கூற்றை உறுதி செய்கிறது. இந்த ரிப்போர்ட்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 19,965 பலேனோ கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 19,630 ஆக மட்டுமே இருந்தது. இது 2 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலமாக நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars) மாருதி சுஸுகி பலேனோ 2வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) ஆகும். சரி, மாருதி சுஸுகி பலேனோ காரை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், விலை முதன்மையான காரணமாக கருதப்படுகிறது.

மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டான சிக்மா வேரியண்ட்டின் விலை 6.70 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டான ஆல்பா ஏஜிஎஸ் வேரியண்ட்டின் விலையும் கூட 9.92 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இந்த விலைக்கு மாருதி சுஸுகி பலேனோ காரை மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் பிரம்மாண்டமான ஒன்றாக உள்ளது. இந்த காரின் வெற்றிக்கு 2வது காரணம் மைலேஜ் (Mileage).
இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. அத்துடன் இந்த காரில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விலை, மைலேஜ், வசதிகள் ஆகிய அம்சங்கள் எல்லாம் ஒருங்கிணைந்துதான், மாருதி சுஸுகி பலேனோவை மிகவும் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக மாற்றியுள்ளன. இது ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) ஆகிய கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








