31 கிமீ மைலேஜை வாரி வழங்கற இந்த காரை வாங்கவே ஆள் இல்லையா! என்னங்க சொல்றீங்க? நம்பவே முடியல!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில் (Premium Hatchback Cars) ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). இதன் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் 12,357 பலேனோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 15,588 ஆக இருந்தது.
இது 21 சதவீத வீழ்ச்சி ஆகும். மாருதி சுஸுகி பலேனோ காரானது, நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் ஒரு பிரீமியம் கார் ஆகும். மாருதி சுஸுகி பலேனோ கார் மொத்தம் 7 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவை நெக்ஸா ப்ளூ, பியர்ல் ஆர்டிக் ஒயிட், ஸ்பிளென்டிட் சில்வர், க்ராண்ட்யூர் க்ரே, ஒபுலெண்ட் ரெட், லக்ஸ் பீஜ் மற்றும் ப்ளூயிஷ் ப்ளாக் ஆகியவை ஆகும். 16 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் போன்றவை எல்லாம் மாருதி சுஸுகி பலேனோ காரின் டிசைனில் (Design) மிகவும் முக்கிய அம்சங்களாக உள்ளன.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 22.86 செமீ ஹெச்டி ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, அடுத்த தலைமுறை சுஸுகி கனெக்ட் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்றவை எல்லாம் மாருதி சுஸுகி பலேனோ காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

ஆனால் வேரியண்ட்களை பொறுத்து, மாருதி சுஸுகி பலேனோ காரின் வசதிகளுடைய பட்டியல் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதே நேரத்தில் மாருதி சுஸுகி பலேனோ நல்ல மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களில் ஒன்றாகும்.
இந்த காரின் பெட்ரோல்-மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 22.35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. அதே நேரத்தில் இந்த காரின் பெட்ரோல்-ஏஜிஎஸ் வேரியண்ட்கள் 22.94 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன. ஆனால் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் இதை விட அதிக மைலேஜ் வழங்க கூடியவை ஆகும்.
அதாவது மாருதி சுஸுகி பலேனோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 30.60 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இவை அனைத்தும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மைலேஜ் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த காரின் சிஎன்ஜி டேங்க் கொள்ளளவு 55 லிட்டர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கவர்ச்சிகரமான டிசைன், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வசதிகள் மற்றும் மைலேஜ் ஆகிய காரணங்களால் மாருதி சுஸுகி பலேனோ வாடிக்கையாளர்களின் விருப்பமான கார்களில் ஒன்றாக உள்ளது. எனவே தற்போது ஏற்பட்டிருப்பது தற்காலிகமான சரிவாக மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.
அதாவது மாருதி சுஸுகி பலேனோ கார் கூடிய விரைவில் இந்த சரிவில் இருந்து மீண்டு வந்து விடும் என்பது எங்கள் கருத்து. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப விலை வெறும் 6.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.


Click it and Unblock the Notifications








