பழைய பன்னீர் செல்வமா மாறி வர போகும் மாருதி கார்... மொத்த கூட்டத்தையும் தனி ஆளா அலற விட போகுது...
இந்திய சந்தையில் சாதாரண ஹேட்ச்பேக் (Hatchback) மற்றும் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு இடையேயான இடைவெளியை பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த கார்கள் நிரப்பி கொண்டுள்ளன. இந்த செக்மெண்ட்டில் மொத்தம் 4 கார்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
அவை மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza), ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) ஆகியவை ஆகும். இதில், மாருதி சுஸுகி பலேனோ கார்தான் மிகவும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி கொண்டுள்ளது.

ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் மாருதி சுஸுகி பலேனோ காருக்கு சிறப்பாக அமையவில்லை. தற்போது வெளியாகியுள்ள இதன் சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 11,618 பலேனோ கார்களை விற்பனை செய்துள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு மே மாதம், 12,842 ஆக இருந்தது. அதாவது மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது. வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும், மாருதி சுஸுகி பலேனோ கார் விற்பனையில் வீழ்ச்சியையே சந்தித்துள்ளது.

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 13,180 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த மே மாதம் இந்த எண்ணிக்கை நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 11,618 ஆக குறைந்துள்ளது. இந்த வகையில் பார்த்தால், மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை 11.85 சதவீதம் குறைந்துள்ளது.
ஆனால் இவை எல்லாம் தற்காலிகமான சரிவாக மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டின் கிங் என்றால், அது கண்டிப்பாக மாருதி சுஸுகி பலேனோதான். இது ஓரளவிற்கு விலை குறைவானது என்பதுடன் மட்டுமல்லாது, அதிக மைலேஜூம் (Mileage) தரக்கூடியது.
மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப விலை வெறும் 6.70 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மாருதி சுஸுகி பலேனோ கார் பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. இது போன்ற காரணங்களால், மாருதி சுஸுகி பலேனோ கார் கூடிய விரைவில் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என நாங்கள் கருதுகிறோம். மாருதி சுஸுகி பலேனோ வளர்ச்சி பாதைக்கு திரும்பினால், அதன் போட்டி மாடல்களுக்கு கண்டிப்பாக கடுமையான சவால் காத்து கொண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நீங்கள் ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரை வாங்க வேண்டும் என முடிவு செய்து விட்டால், மாருதி சுஸுகி பலேனோ பரிசீலனை செய்யலாம். விலை ஓரளவிற்கு குறைவு, அதிக மைலேஜ் போன்றவை எல்லாம் மாருதி சுஸுகி பலேனோ காரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்கள்.


Click it and Unblock the Notifications








