டாடாவை கதற விடும் மாருதி கார்! 31 கிமீ மைலேஜ்! ஆனா விலை நம்பவே முடியாத அளவுக்கு கம்மியா இருக்கு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). இது பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் 13,784 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், 16,293 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 2,509 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாருதி சுஸுகி பலேனோ கார் விற்பனையில் 15 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இருப்பினும் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்திய சந்தையில், மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் (Top 10 Hatchbacks November 2025), மாருதி சுஸுகி பலேனோ கார், 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் இருப்பதும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள்தான்.

அவை முறையே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) மற்றும் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) ஆகியவை ஆகும். இந்த வரிசையில் மாருதி சுஸுகி பலேனோ கார், 3வது இடத்தை பிடித்துள்ளது. தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி பலேனோ கார் இந்திய சந்தையில் முதன் முதலில் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த சமயத்தில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.99 லட்ச ரூபாயாக மட்டுமே இருந்தது. இந்தியாவிலேயே முதல் முறையாக அந்த சமயத்தில் மாருதி சுஸுகி பலேனோ காரில்தான் ஆப்பிள் கார்பிளே வசதி அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 5.99 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கணக்கிட்டால், இடைப்பட்ட சுமார் 10 ஆண்டுகளில், மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் வெறும் 1 லட்ச ரூபாய் மட்டும்தான் உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி பலேனோ காரின் டாப் வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் 9.10 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மாருதி சுஸுகி பலேனோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். விற்பனையில் சரிவை சந்தித்திருந்தாலும் கூட, மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை பிரம்மாண்டமான ஒன்றுதான். இதற்கு சரியான விலை நிர்ணயம், சிறப்பான மைலேஜ் போன்றவைதான் மிகவும் முக்கியமான காரணங்களாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி பலேனோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








