மாருதி காரே பிடிக்காது சொல்பவரா நீங்க? இனி இப்படி சொல்ல தயங்குவீங்க.. திரும்புற பக்கமெல்லாம் பலூன் இருக்கும்!!

பாதுகாப்பு தருவதில் மாருதி (Maruti) கார்கள் மிக மோசம், அதை எங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது என சொல்பவரா நீங்க? உங்களின் வாயை அடைக்கின்ற முயற்சியிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகின்றது. இதன் வெளிப்பாடாகவே சமீபத்தில் அது விற்பனைக்குக் கொண்டு வந்த புதிய தலைமுறை டிசையர் (New Gen Dzire) கார் மாடல் இருக்கின்றது. பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. குளோபல் என்சிஏபி (Global NCAP) நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த பாதுகாப்பு ரேட்டிங்கை அது பெற்றது.

இந்த நிலையிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் தன்னுடைய மற்ற தயாரிப்புகளையும் அதிக பாதுகாப்புமிக்கதாக மாற்றும் முயற்சியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தன்னை வெறுப்பவர்களையும் தன் பக்கம் ஈர்க்கும் விதமாக அந்நிறுவனம் அதன் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றான பிரெஸ்ஸா (Brezza)-வில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக காற்று பலூன் (ஏர் பேக்கு)-களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கின்றது.

Brezza 2025 model features six airbags

6 ஏர் பேக்குகளையே அதில் வழங்கி இருக்கின்றது. பிரெஸ்ஸாவின் அனைத்து வேரியண்டுகளுக்கும் ஆறு ஏர் பேக்குகளை நிறுவனம் கட்டாயமாக்கி இருக்கின்றது. எனவே பிரெஸ்ஸாவின் பாதுகாப்பு தரம் தற்போது கணிசமாக உயர்ந்திருக்கின்றது. முன்னதாக பிரெஸ்ஸாவின் உயர்நிலை வேரியண்டுகளில் மட்டுமே ஆறு ஏர் பேக்குகள் வழங்கப்பட்டன என்பது கவனிக்கத்தகுந்தது.

பிரெஸ்ஸாவின் பாதுகாப்பு தரம் உயர்ந்திருப்பதனால் அதன் விலையும் தற்போது உயர்ந்திருக்கின்றது. ஆரம்ப விலையே ரூ. 8 லட்சத்து 54 ஆயிரமாக உயர்ந்திருக்கின்றது. இந்த கார் மாடலின் அதிகபட்ச விலை ரூ. 14 லட்சத்து 14 ஆயிரம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

Brezza 2025 model features six airbags

ரூ. 20 ஆயிரம் வரையே இந்த காரின் விலையில் உயர்வு செய்யப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய பிரெஸ்ஸாவின் விலை உயர்விற்கு அதிக ஏர் பேக்குகள் மட்டுமல்ல மேலும் சில காரணங்களும் உள்ளன. இந்த காரில் மும்முனை சீட் பெல்ட்டே வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுவும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவே வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, பயணிகளின் பயணத்தை சௌகரியமானதாக மாற்றும் பொருட்டு உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட இருக்கை முன் பக்கத்திலும், பின் பக்க இருக்கையாளர்களுக்கு ஆர்ம் ரெஸ்ட்-ம், அட்ஜஸ்டபிள் ஹெட் ரெஸ்ட்-ம் புதிய பிரெஸ்ஸாவில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஆனால், எஞ்சினைப் பொருத்த வரை எந்த மாற்றத்தையும் மாருதி சுஸுகி இந்த காரில் செய்யவில்லை. கே-சீரிஸ் 1.5 லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டு விதமான ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றது. இதன் சிஎன்ஜி ஆப்ஷனே அதிகம் மைலேஜ் தரக் கூடிய தேர்வாக காட்சியளிக்கின்றது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கு அது 25.51 கிமீட்டர் வரை மைலேஜை தரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றாக பிரெஸ்ஸா இருக்கின்றது. இதன் பாதுகாப்பு தரத்தை அதிகப்படுத்தியிருப்பது டாடா நிறுவனத்தின் பாதுகாப்பு திறன்மிக்க எஸ்யூவி ரக கார்களுக்கு போட்டியை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாடா நெக்ஸான்-க்கு இன்னும் அதிக தலைவலியை ஏற்படுத்தக் கூடியதாக பிரெஸ்ஸா மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, February 14, 2025, 21:41 [IST]
English summary
Maruti suzuki brezza 2025 model introduces six airbags as standard
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+