மாருதியிடம் மண்ணை கவ்வியது டாடா... உலக அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய காருக்கே இப்படி ஒரு நிலைமையா!

இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) ஆகியவை அதிகம் விற்பனையாகும் கார்களாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் இந்த 2 கார்களுக்கும் இடையே, விற்பனையில் மிக கடுமையான போட்டி காணப்படுவது வழக்கம். இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய 2 கார்களும் விற்பனையில் கடுமையாக போட்டியிட்டுள்ளன.

ஆனால் இதில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா வென்றுள்ளது. ஆம், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16,971 பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars In April 2025), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் 3வது இடத்தை பிடித்துள்ளது.

Maruti Suzuki Brezza

ஆனால் இந்த பட்டியலில் டாடா நெக்ஸானுக்கு 6வது இடம்தான் கிடைத்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15,457 டாடா நெக்ஸான் கார்களை மட்டுமே விற்பனை செய்திருப்பதுதான் இதற்கு காரணம். இதன் காரணமாக டாடா நெக்ஸான் காரால் இந்த பட்டியலில் 6வது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.

அத்துடன் மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவிடமும், டாடா நெக்ஸான் வீழ்ந்துள்ளது. சரியாக சொல்வதென்றால், நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம், டாடா நெக்ஸானை விட, 1,514 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரிடம் வீழ்ந்திருப்பதுடன் மட்டுமல்லாது, டாடா நெக்ஸான் கார் விற்பனையில் வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது.

Tata Nexon

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 16,366 டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 15,457 ஆக குறைந்துள்ளது. அதாவது 909 டாடா நெக்ஸான் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மறுபக்கம் மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவே விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 16,546 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 16,971 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 425 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Take a Poll

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய இரண்டுமே சிறந்த கார்களாக கருதப்படுகின்றன. அதன் காரணமாகவே இந்த 2 கார்களுக்கும் இடையே போட்டி மிக கடுமையாக உள்ளது.

போட்டி மிக கடுமையாக இருப்பதை நெருக்கமான வித்தியாசம் மூலமாக நாம் உணரலாம். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய 2 கார்களுக்குமே நல்ல வரவேற்பு உள்ளதால், வரும் காலங்களிலும் போட்டி மிக கடுமையாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். இந்த 2 கார்களில், டாடா நெக்ஸான் மிகவும் பாதுகாப்பான ஒன்றாக கருதப்படுகிறது.

ஏனெனில் டாடா நெக்ஸான்தான் குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' கார் ஆகும். இதன் மூலமாக டாடா நெக்ஸான் இந்தியாவிற்கே பெருமை தேடி தந்தது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, May 12, 2025, 23:54 [IST]
English summary
Maruti suzuki brezza beats tata nexon in april 2025 sales check details here
மேலும்... #maruti suzuki #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+