இப்படி ஒரு காரை இந்த ரேட்ல குடுக்கறாங்களா! அதான் வாங்கறதுக்கு மாருதி ஷோரூம்ல எல்லாரும் வரிசை கட்டி நிக்கறாங்க!

இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த செக்மெண்ட்டை சேர்ந்த கார்கள் நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏற்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நடுத்தர வர்க்க மக்களின் எஸ்யூவி கார் கனவு நிஜமாகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளன. இதில், ஆதிக்கம் செலுத்த கூடிய கார்களில் ஒன்றாக இருப்பது மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) ஆகும்.

தற்போது வெளியாகியுள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், அதன் ஆதிக்கத்தை உறுதி செய்கிறது. இது நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் சேல்ஸ் ரிப்போர்ட் ஆகும்.

Maruti Suzuki Brezza

இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 16,546 பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 14,614 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் விற்பனையில் 13 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா 6வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 5 இடங்களில் முறையே ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், டாடா பன்ச், மாருதி சுஸுகி வேகன் ஆர் மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா ஆகிய கார்கள் இருக்கின்றன.

Maruti Suzuki Brezza Airbags

இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் (LXI) விலை 8.69 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் (ஸ்மார்ட் ஹைப்ரிட் ZXI+ AT) விலை 13.98 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 25.51 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. அத்துடன் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா வசதிகள் (Features) நிரம்பிய கார்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

இதில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி வியூ கேமரா, அடுத்த தலைமுறை சுஸுகி கனெக்ட் மற்றும் ஸ்மார்ட் ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். இது போன்ற காரணங்களால்தான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) ஆகிய கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது எங்களுடைய கருத்து.

More from DriveSpark

Article Published On: Monday, April 7, 2025, 22:48 [IST]
English summary
Maruti suzuki brezza sales report march 2025 13 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+