2026இல் மொத்த கார் மார்க்கெட்டையும் ஆட்டம் காண வைக்க போகிற மாருதி கார்! சிஎன்ஜியிலும் இயங்கும்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் (Brezza Facelift) காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த காம்பாக்ட் எஸ்யூவி கார், 2022ஆம் ஆண்டில் அதன் இரண்டாம் தலைமுறை அப்கிரேடிற்கு பிறகு தனது முதல் பெரிய ஃபேஸ்லிஃப்ட் மாற்றத்தைப் பெறவுள்ளது. புதிய தொழில்நுட்ப அம்சங்களையும், மேம்படுத்தப்பட்ட உட்புற அழகியலையும் இந்தக் கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ஸ்பை படங்களின்படி, காரின் வெளிப்புறத்தில் சிறு மாற்றங்கள் இருக்கலாம். முகப்பு விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகள் பெரிய அளவில் மாறாமல் இருக்க, பகல்நேரத்தில் எரியக்கூடிய எல்இடி விளக்குகள் புதிய வடிவமைப்புடன் வரக்கூடும். இதேபோல், கிரில், முன் & பின்பக்க பம்பர்களில் புதிய பாகங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

maruti suzuki brezza s new facelift version spotted

காரின் பக்கவாட்டு தோற்றம் பெரும்பாலும் தற்போதைய மாடலை ஒத்திருக்கும். புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள் மட்டுமே ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக அமையலாம். மாருதி பிரெஸ்ஸா அதன் பெட்டக வடிவமைப்பு, நிமிர்ந்த முகப்பு பகுதி, சதுர வடிவ வீல் ஆர்ச்கள் மற்றும் மெட்டாலிக் ஃபினிஷ் செய்யப்பட்ட ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுகள் மூலம் தனித்துவமான தோற்றத்தைக் கொண்டிருக்கும்.

ஒருங்கிணைந்த டர்ன் இண்டிகேட்டர்களுடன் கருப்பு நிற ORVM-கள், மேற்கூரையில் பொருட்களை கட்டி எடுத்து செல்ல கம்பி மற்றும் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா ஆகியவை இதன் பிற சிறப்பம்சங்கள் ஆகும். உட்புறத்தைப் பொறுத்தவரை, பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் புதுப்பிக்கப்பட்ட ஸ்டீயரிங் சக்கரத்தைக் கொண்டிருக்கும். மேலும், TFT இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், வெண்டிலேட்டட் இருக்கைகள், பவர்டு டிரைவர் இருக்கை, பிரீமியம் ஆடியோ சிஸ்டம் மற்றும் மேம்படுத்தப்பட்ட வண்ண கேபின் விளக்குகள் (ambient lighting) போன்ற அம்சங்கள் இதில் சேர்க்கப்படலாம்.

maruti suzuki brezza s new facelift version spotted

தற்போது, பிரெஸ்ஸாவின் டாப் வேரியண்ட்களில் 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், நடுத்தர வேரியண்ட்களில் 7 அங்குல தொடுதிரையும் உள்ளன. புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் காரில், பெரிய 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. பிரெஸ்ஸாவின் விற்பனையில் சிஎன்ஜி (CNG) வேரியண்ட்கள் கணிசமான பங்களிப்பை அளித்து வருகின்றன.

இருப்பினும், சிஎன்ஜி வேரியண்ட்களில் காரின் பின்பக்கத்தில் சிஎன்ஜி சிலிண்டரை வைப்பத்தால் அளவு குறையும் பூட் ஸ்பேஸ் இடவசதி பலருக்கு ஒரு சிக்கலாக உள்ளது. இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், 2026 பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் சிஎன்ஜி காரில், காரின் அடிப்பகுதியில் சிஎன்ஜி கிட் வழங்கப்படலாம். மாருதி ஏற்கனவே தனது விக்டோரிஸ் (Victoris) காரில் இந்த புதிய சிஎன்ஜி செட்-அப்பை அறிமுகப்படுத்தி, பூட் ஸ்பேஸ் சிக்கலைத் தீர்த்துள்ளது.

செயல்திறனைப் பொறுத்தவரை, பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார் தற்போதுள்ள என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களேயே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஸ்ஸா காரில் கே15சி ஸ்மார்ட் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 103.1 பிஎஸ் சக்தியையும், 139 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

maruti suzuki brezza s new facelift version spotted

வேரியண்ட்டைப் பொறுத்து, இதன் மைலேஜ் 17.80 கிமீ/லி முதல் 19.89 கிமீ/லி வரை இருக்கும். பிரெஸ்ஸா சிஎன்ஜி காரை அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிஎன்ஜியிலும் இயக்கலாம், அதேநேரம் பெட்ரோலிலும் இயக்கலாம். சிஎன்ஜியில் இயங்கும்போது, இதன் சக்தி 87.8 பிஎஸ் மற்றும் டார்க் 121.5 என்.எம் ஆகக் குறையும். பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கிறது. இதன் 25.51 கிமீ/கிலோ மைலேஜ் இந்த சிஎன்ஜி காரை நிறைய பேர் வாங்குவதற்கு காரணமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியில் இருந்து சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்றான பிரெஸ்ஸா அப்கிரேட் செய்யப்பட உள்ளதனாலேயே மார்க்கெட்டில் அதிகம் கவனம் ஏற்பட்டுள்ளது. தற்போது பொது வெளியில் காட்சித்தந்து இருப்பது புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் காரின் சிஎன்ஜி வெர்சன் என்பதால், 2026 பிரெஸ்ஸா சிஎன்ஜி அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதியாகிறது.

புதிய பிரெஸ்ஸா சிஎன்ஜி காரின் அடியில் சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்படும் யுக்தி பிரெஸ்ஸா சிஎன்ஜி உள்பட மாருதி சுஸுகியின் மொத்த சிஎன்ஜி கார்களின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும், புதிய பிரெஸ்ஸா சிஎன்ஜி காரிலும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே தொடரப்படும்.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார், டாடா நெக்ஸான் (Tata Nexon), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV3XO) மற்றும் ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq) போன்ற கார் மாடல்களுடன் தொடர்ந்து போட்டியிடும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 22, 2025, 10:22 [IST]
English summary
Maruti suzuki brezzas new facelift version spotted ahead of early 2026 launch
மேலும்... #maruti suzuki #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X