5-ஸ்டார் ரேட்டிங் கொடுத்ததற்கு அப்புறம் ஷோரூம்களில் கூட்டம் நிரம்பி வழியுது! மாருதி கார்களில் இது வேற ரகம்!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யக்கூடிய ஒரேயொரு கார் நிறுவனம், மாருதி சுஸுகி ஆகும். இது கடந்த 2025 ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 38 ஆயிரத்து 704 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது வழக்கத்தை காட்டிலும் குறைவா? அதிகமா? என்பதையும், மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் கார்களின் விற்பனை எண்ணிக்கையையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்திய- ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகியில் இருந்து தற்சமயம் 17 விதமான கார் மாடல்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மொத்தமாக கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 704 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் 0.55% அதிகமாகும்.

april model wise sales report

அதாவது, கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான மாருதி கார்கள் தான் 2024 ஏப்ரல் மாதத்திலும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும், துல்லியமாக பார்த்தால் கடந்த ஆண்டு ஏப்ரலில் 752 கார்கள் குறைவாக 1 லட்சத்து 37 ஆயிரத்து 952 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து இருந்தது.

கடந்த 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் சுமார் 12 ஆயிரத்து 39 மாருதி சுஸுகி கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், அந்த மாதத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 743 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி காராக முதலிடத்தை அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக டிசைர் (Dzire) பிடித்துள்ளது.

april model wise sales report

ஏனெனில், மாருதி சுஸுகி டிசைர் ஆனது ஓர் செடான் (Sedan) ரக கார் ஆகும். நீண்ட வருடங்களுக்கு பிறகு அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாருதி காராக ஒரு செடான் கார் வந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில், இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக தொடர்ந்து 2வது மாதமாக ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) முதலிடத்தை பிடித்துள்ளது.

அதற்கடுத்து 2வது இடத்தை மாருதி சுஸுகி டிசைர் பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டிசைர் கார்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 996 ஆகும். அதுவே, கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் 15 ஆயிரத்து 825 டிசைர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரலில் டிசைர் கார்கள் விற்பனை 7.4%, அதாவது 1,171 யூனிட்கள் அதிகரித்துள்ளது.

கடந்த 2025 மார்ச் மாதத்தில் கூட 15 ஆயிரத்து 460 டிசைர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டிசைருக்கு அடுத்து கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாருதி காராக 2வது இடத்தில் பிரெஸ்ஸா (Brezza) உள்ளது. மாருதி சுஸுகியின் சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி காரான பிரெஸ்ஸாவின் விற்பனை எண்ணிக்கைக்கும், முதலிடத்தில் உள்ள டிசைரின் விற்பனை எண்ணிக்கைக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை.

கடந்த மாதத்தில் 16,996 டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 16,971 பிரெஸ்ஸா கார்கள் விற்கப்பட்டுள்ளன. ஆனால், 2024 ஏப்ரலில் இதனை காட்டிலும் 142 கார்கள் அதிகமாக 17 ஆயிரத்து 113 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2025 மார்ச்சில் 16 ஆயிரத்து 546 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

பிரெஸ்ஸாவுக்கு அடுத்து இந்த வரிசையில் 3வது இடத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் எம்பிவி (MPV) ரக காராக விளங்கும் எர்டிகா (Ertiga) 15 ஆயிரத்து 780 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 13,544 எர்டிகா கார்கள் உடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 2,236 யூனிட்கள் அதிகம் என்றாலும், 2025 மார்ச்சை காட்டிலும் 1,024 யூனிட்கள் குறைவாகும்.

ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 16 ஆயிரத்து 804 எர்டிகா கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. எர்டிகாவுக்கு அடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அதிகம் விற்பனை செய்த காராக 4வது இடத்தில் ஸ்விஃப்ட் (Swift) உள்ளது. பெரும்பாலான மாதங்களில் ஒட்டுமொத்த இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தை பிடிக்கக்கூடிய ஸ்விஃப்ட்டின் விற்பனை கடந்த மாதத்தில் சற்று சறுக்கலை சந்தித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த 2025ஆம் ஆண்டின் கடந்த மார்ச் மாதத்தில் 17 ஆயிரத்து 746 ஸ்விஃப்ட் கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்து இருந்த நிலையில், கடந்த ஏப்ரலில் சற்று குறைவாக 14 ஆயிரத்து 592 ஸ்விஃப்ட் கார்களை விற்றுள்ளது. 2024 ஏப்ரலில் இன்னும் குறைவாக வெறும் 4 ஆயிரத்து 94 ஸ்விஃப்ட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஏனெனில், அந்த சமயத்தில் ஸ்விஃப்ட் கார்களின் புக்கிங்குகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தன.

ஸ்விஃப்ட்டிற்கு அடுத்து, மாருதி சுஸுகியின் லேட்டஸ்ட் காரான ஃபிரான்க்ஸ் (Fronx) இந்த வரிசையில் 5வது இடத்தை 14 ஆயிரத்து 345 யூனிட்கள் விற்பனை உடன் பிடித்துள்ளது. 2023 ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிரான்க்ஸ் கார் கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரலிலும் இதே எண்ணிக்கையிலான யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தாலும், கடந்த 2025 மார்ச்சில் 13 ஆயிரத்து 669 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

இந்த வரிசையில் 6வது மற்றும் 7வது இடங்களில் முறையே மாருதி சுஸுகி வேகன்ஆர் (Wagon R) மற்றும் பலேனோ (Baleno) கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 13,413 மற்றும் 13,180 ஆகும். இதில், மாருதி சுஸுகியின் உயரமான ஹேட்ச்பேக் காராக விளங்கும் வேகன்ஆர் 2024 ஏப்ரலிலும் சரி, 2025 மார்ச்சிலும் சரி 17 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

இந்த வரிசையில் 8வது இடத்தில் மாருதி சுஸுகியின் பயணிகள் வேனான ஈக்கோ 11 ஆயிரத்து 438 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. அதுவே, 2024 ஏப்ரலில் 12 ஆயிரத்து 60 ஈக்கோ வேன்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 9வது மற்றும் 10வது இடங்களில் உள்ள கிராண்ட் விட்டாரா மற்றும் ஆல்டோ கார்களின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கை முறையே 7,154 மற்றும் 5,606 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், இன்னும் 7 விதமான கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்கிறது. இவற்றின் விற்பனை எண்ணிக்கை 5 ஆயிரத்தை கூட தொடவில்லை என்பதினாலேயே இந்த டாப்-10 லிஸ்ட்டில் அவை இடம்பெறவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில் மாருதி சுஸுகியில் பெரிய அளவில் விற்பனையில் சறுக்கலை சந்தித்துள்ள கார் என்றால், அது வேகன்ஆர் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 15, 2025, 21:08 [IST]
English summary
Maruti suzuki cars model wise sales report 2025 april
மேலும்... #maruti suzuki #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+