வர்ற 31ம் தேதியோட கதை முடிஞ்சுது! நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய மாருதி சுஸுகி நிறுவனத்தின் திடீர் முடிவு!
இந்தியாவின் நம்பர்-1 கார் நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுஸுகி (Maruti Suzuki) தன்வசம் வைத்துள்ளது. தற்போதைய நிலையில் அதன் அரேனா (Arena) ஷோரூம்கள் மூலம் 9 கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தவை 5. அவை மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10), மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso), மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio), மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) ஆகியவை ஆகும்.
அதே நேரத்தில் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), எம்பிவி ரகத்தை சேர்ந்த எர்டிகா (Maruti Suzuki Ertiga), செடான் ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகிய கார்களும் அரேனா ஷோரூம்கள் மூலமாகவே விற்பனை செய்யப்படுகின்றன.

மறுபக்கம் வேன் ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி ஈக்கோவும் (Maruti Suzuki Eeco) அரேனா ஷோரூம்கள் மூலமாகவே விற்பனை செய்யப்படுகிறது. அரேனா ஷோரூம்கள் மூலமாக 9 கார்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், நெக்ஸா (Nexa) பிரீமியம் ஷோரூம்கள் மூலமாக 8 கார்கள் விற்பனையாகி கொண்டுள்ளன.
அவை மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx), மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) ஆகியவை ஆகும்.

நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வரும் எஞ்சிய 3 கார்கள், மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz), மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) ஆகியவை ஆகும்.
இந்த அனைத்து கார்களின் விலையையும் மாருதி சுஸுகி நிறுவனம் அதிரடியாக உயர்த்தவுள்ளது. ஆம், நடப்பு 2025ம் ஆண்டில் 3வது முறையாக விலை உயர்வு (Price Hike) குறித்த அறிவிப்பை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனத்தின் அனைத்து கார்களின் விலையும் அதிரடியாக உயரவுள்ளது.
இந்த விலை உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலை 4 சதவீதம் வரை உயரவுள்ளது. இந்த விலை உயர்வு மாடலை பொறுத்து மாறுபடலாம் என்றாலும், அதிகபட்சமாக 4 சதவீதம் வரை விலைகள் உயர்த்தப்படவுள்ளன.
உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால்தான், இந்திய சந்தையில் கார்களின் விலையை உயர்த்துவதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி நடப்பு 2025ம் ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் கார்களின் விலையை உயர்த்துவது இது 3வது முறை ஆகும்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருந்தன. அப்போதும் 4 சதவீதம் வரைதான் மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 2வது முறையாக மாருதி சுஸுகி கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன.
பிப்ரவரி மாதத்தில் 32,500 ரூபாய் வரையில் மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருந்தன. இதை தொடர்ந்து நடப்பு 2025ம் ஆண்டில் 3வது முறையாக வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலை 4 சதவீதம் வரை அதிரடியாக உயரவுள்ளது.
வரும் மார்ச் 31ம் தேதி வரை மட்டும்தான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் தற்போதைய விலையில் விற்பனை செய்யப்படும். அதற்கு பிறகு விலை அதிரடியாக உயர்ந்து விடும். எனவே வரும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு மாருதி சுஸுகி நிறுவன கார்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள், சற்று கூடுதல் தொகையை செலுத்த தயாராகி கொள்வது நல்லது.
மாருதி சுஸுகி நிறுவனத்தை தொடர்ந்து, இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மற்ற முன்னணி கார் நிறுவனங்களும், விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல், வரும் மாதங்களில் புதிய கார்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 4 சதவீதம் வரையிலான விலை உயர்வு என்பதால், கண்டிப்பாக இந்த விலை உயர்வு, மாருதி சுஸுகி கார்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என நாங்கள் கருதுகிறோம். ஆனால் இதன் காரணமாக மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விற்பனை குறையுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த கேள்விக்கு வரும் மாதங்களில் நமக்கு பதில் தெரிந்து விடும். நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்யும் கார்களின் பட்டியலில் கூடிய விரைவில் ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) சேர போகிறது. அதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.
மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம். மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் வரும் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், மாருதி சுஸுகி சியாஸ் கார் விற்பனையில் இருந்து விலக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மாருதி சுஸுகி சியாஸ் காரின் விற்பனை மந்தமாக இருந்து வருவதுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இது செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் சமீப ஆண்டுகளாகவே செடான் ரக கார்களுக்கான வரவேற்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் எஸ்யூவி ரக கார்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








