மாருதியில் இந்த காருக்கு பயங்கர டிமாண்ட்... ஃபேக்ட்ரி ஓய்வில்லாமல் ஓடிக்கிட்டு இருக்கு போல!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான கார் நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. நடந்து முடிந்த கடந்த 2025 ஜனவரி மாதத்திலும் இமாலய எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி ஆச்சிரியப்படுத்தி உள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களையும், வழக்கத்தை காட்டிலும் மாருதி சுஸுகியின் கார்கள் விற்பனை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகியில் இருந்து கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 599 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2024 ஜனவரியில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 802 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது.

maruti suzuki cars sales report

இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் மாருதி சுஸுகியின் கார்கள் விற்பனை ஆனது 6,797 யூனிட்கள் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி காராக முதலிடத்தை பிடித்திருக்கும் கார், வேகன்ஆர் (WagonR) ஆகும்.

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட வேகன்ஆர் கார்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 78 ஆகும். அதுவே, 2024 ஜனவரியில் 17 ஆயிரத்து 756 வேகன்ஆர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்தில் 6,322 வேகன்ஆர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

maruti suzuki cars sales report

கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்திலும் 17 ஆயிரத்து 303 வேகன்ஆர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட மாருதி சுஸுகி காராக 2வது இடத்தில் பலேனோ (Baleno) உள்ளது. 2024 டிசம்பரில் வெறும் 9,112 பலேனோ கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கடுத்த கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 19 ஆயிரத்து 965 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான பலேனோ கார்கள் தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 3வது இடத்தில் ஸ்விஃப்ட் 17 ஆயிரத்து 81 கார்கள் விற்பனை உடன் உள்ளது. ஆனால், 2024 டிசம்பரில் 10 ஆயிரத்து 421 ஸ்விஃப்ட் கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.

maruti suzuki cars sales report

4வது மற்றும் 5வது இடங்களில் கிராண்ட் விட்டாரா மற்றும் டிசைர் கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 15,784 மற்றும் 15,383 ஆகும். 6வது மற்றும் 7வது இடங்களில் உள்ள ஃபிரான்க்ஸ் மற்றும் பிரெஸ்ஸா கார்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 15,192 மற்றும் 14,797 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியில் இருந்து 17 விதமான கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் முதல் 7 கார்களை மட்டுமே இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இந்த லிஸ்ட்டின் முதல் 10 மாருதி சுஸுகி கார்கள் அனைத்தும் 11 ஆயிரத்துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டவை ஆக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, February 8, 2025, 23:59 [IST]
English summary
Maruti suzuki cars sales report 2025 january wagonr baleno swift
மேலும்... #maruti suzuki #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X