முடிஞ்சா இன்னைக்கு நைட்டே வாங்கி போட்ருங்க.. மாருதி கார்கள் விலை பெரிய அளவுல உயர போறதா தகவல் வெளியாகியிருக்கு!

வாகனங்களின் விலையை உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக உயர்த்தி வருவதை நாம் கடந்த சில தினங்களாகவே பார்த்து வருகின்றோம். அந்தவகையில், பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யும் அதன் கார் மாடல்களின் விலையை உயர்த்த இருக்கின்றது. நாளை (பிப்ரவரி 1) முதலே தன்னுடைய தயாரிப்புகளின் விலையை உயர்த்த மாருதி சுஸுகி திட்டமிட்டு உள்ளது. எனவே இன்றே மாருதி கார்கள் குறைந்த விலையில், அதாவது, உயர்த்தப்படாத விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கடைசி நாள் இருக்கப் போகின்றது.

இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி மாருதி கார்களின் விலையில் ரூ. 32 ஆயிரத்து 500 வரை உயர இருப்பது தெரிய வந்து இருக்கின்றது. இதற்கு வாகன கட்டுமான செலவு மற்றும் பிற செலவுகள் அதிகரித்திருப்பதே காரணம் என கூறப்படுகின்றது. இதைக் காரணம் காட்டியே சமீப நாட்களாக வாகன உற்பத்தியாளர்கள் பலர் விலையை உயர்த்தி வருகின்றனர்.

Maruti car price hike

அதாவது, வாகன உற்பத்தியால் ஏற்பட்டு இருக்கும் செலவு சுமையை வாடிக்கையாளர்களின் பக்கம் திருப்பி விடும் விதமாகவே தங்களின் வாகனங்களின் விலையை வாகன உற்பத்தியாளர்கள் உயர்த்திக் கொண்டு உள்ளனர். அந்தவகையிலேயே, நாளை முதல் மாருதி சுஸுகியும் அதன் வாகனங்களின் விலையை உயர்த்த இருக்கின்றது.

இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின்கீழ் ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட், டிசையர், ஈகோ, பிரெஸ்ஸா, எர்டிகா உள்ளிட்ட கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவை அனைத்தும் மாருதியின் அரேனா நெட்வொர்க்கின் கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்கள் ஆகும்.

Maruti wagonr

இதேபோல், நெக்ஸா எனும் நெட்வொர்க்கின்கீழும் நிறுவனம் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது ஓர் பிரீமியம் கார்களுக்கான நெட்வொர்க்காகும். அதாவது, பலினோ, சியாஸ், எக்ஸ்எல்6, ஃப்ரான்க்ஸ், இன்விக்டோ, ஜிம்னி மற்றும் கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட கார் மாடல்களையே இந்த நெட்வொர்க்கின்கீழ் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த அனைத்து மாடல்களின் விலையிலும் மாருதி சுஸுகி மாற்றம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, விலை உயர்வை அது செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், ஆரம்ப நிலை வேரியண்டுகளின் விலையில் எந்த மாற்றத்தையும் அது நிகழ்த்தாது என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே குறைந்த விலை கார் மாடல்கள் அதே குறைவான விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் மாருதியிடம் இருந்து வெளியாகவில்லை. அதவேளையில், மாருதி சுஸுகி மட்டுமே இந்த ஆண்டில் விலை உயர்வை செய்திருக்கும் முதல் நிறுவனம் அல்ல. ஏற்கனவே, ஹோண்டா மற்றும் எம்ஜி உள்ளிட்ட பிராண்டுகளும் தங்களின் வாகனங்களின் விலையை உயர்த்த இருக்கின்றன.

இந்த வரிசையிலேயே தற்போது மாருதி சுஸுகியும் இணைய இருக்கின்றது. நிறுவனத்தின் விலை உயர்வு நடவடிக்கை இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, மாருதி கார் காதலர்களை பேரதிர்ச்சியில் இந்த தகவல் ஆழ்த்தி இருக்கின்றது. இந்த விலை உயர்வால் நிறுவனத்தின் விற்பனையில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்கிற கவலை ஒரு சிலர் மத்தியில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி கார்களின் விற்பனை பாதிக்க வாய்ப்பே இல்லை என்றே கூறப்படுகின்றது. ஏனெனில் சந்தையில் பெரும்பாலான நிறுவனங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தி உள்ளன. எனவே, மாருதி கார்களின் விற்பனையில் கடுகளவும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, January 31, 2025, 19:42 [IST]
English summary
Maruti suzuki cars to witness price increase starting 1 february 2025
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+