ஜிஎஸ்டி குறைச்சது, மாருதிக்கு கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டுது! ஒரே வருடத்தில் எவ்வளவு பெரிய மாற்றம்!
2025 நவம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இந்தியாவின் கார் சந்தையில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. 41% சந்தைப் பங்களிப்புடன், டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) மற்றும் ஹூண்டாய் (Hyundai) நிறுவனங்களின் மொத்த விற்பனையை விட அதிக கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.
கடந்த நவம்பரில் மாருதி சுஸுகி 1 லட்சத்து 70,971 கார்களை விற்றுள்ளது. இது கடந்த மாதத்தில் இந்திய அளவில் மொத்தம் விற்பனையான 4 லட்சத்து 17,495 கார்களில் 41% ஆகும். பண்டிகைக் கால விற்பனைக்குப் பிந்தைய சந்தை தளர்வு காரணமாக முந்தைய அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் மாருதி சுஸுகியின் விற்பனையில் 3% சரிவு பதிவாகியுள்ளது.

இருப்பினும், 2024 நவம்பரில் விற்பனையான 1,41,312 மாருதி சுஸுகி கார்களுடன் ஒப்பிடுகையில், இது 22% ஆரோக்கியமான வளர்ச்சியாகும். மாருதி கார் மாடல்களில், டிசையர் (Dzire) 21,082 யூனிட்கள் விற்பனையுடன் இந்த லிஸ்ட்டில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இது 2024 நவம்பரில் விற்பனையான 11,779 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 79% வளர்ச்சி ஆகும்.
அதேநேரம், 2024 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் 1% சிறிய முன்னேற்றத்தை டிசையர் அடைந்துள்ளது. நம்பகமான செயல்திறன் மற்றும் சிறந்த எரிபொருள் சிக்கனம் காரணமாக குடும்ப மற்றும் வணிக வாடிக்கையாளர்கள் மத்தியில் டிசையர் தொடர்ந்து விரும்பப்படுகிறது. டிசையருக்கு அடுத்து 2வது இடத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்றொரு முன்னணி விற்பனை மாடலான ஸ்விஃப்ட் (Swift) உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 19,733 யூனிட்கள் விற்பனையான இந்த ஹேட்ச்பேக் ரக கார் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விற்கப்பட்ட 14,373 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 34% வளர்ச்சியையும், முந்தைய 2025 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 27% வளர்ச்சியையும் பெற்றுள்ளது. இதற்கடுத்து 3வது மற்றும் 4வது இடங்களில் எர்டிகா (16,197 யூனிட்கள்) மற்றும் ஃபிரான்க்ஸ் (15,058 யூனிட்கள்) கார்கள் உள்ளன.
இவை இரண்டும் கடந்த ஆண்டு நவம்பரை காட்டிலும் முறையே 6.91% மற்றும் 1.18% அதிகம் விற்பனையாகி இருந்தாலும், 2025 அக்டோபரை காட்டிலும் எர்டிகா 19% சரிவையும், ஃபிரான்க்ஸ் 11% சரிவையும் சந்தித்துள்ளன. இதேபோல், 5வது இடத்தில் உள்ள வேகன்ஆரின் விற்பனையும் நவம்பரில் 14,619 யூனிட்களாக 2025 அக்டோபரை காட்டிலும் 23% சரிவைக் கண்டுள்ளது.
| No | Maruti Suzuki Cars | Nov-25 | Nov-24 | Diff | Growth % YoY | % Share Nov 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Dzire | 21,082 | 11,779 | 9,303 | 78.98 | 12.33 |
| 2 | Swift | 19,733 | 14,737 | 4,996 | 33.90 | 11.54 |
| 3 | Ertiga | 16,197 | 15,150 | 1,047 | 6.91 | 9.47 |
| 4 | Fronx | 15,058 | 14,882 | 176 | 1.18 | 8.81 |
| 5 | Wagon R | 14,619 | 13,982 | 637 | 4.56 | 8.55 |
| 6 | Brezza | 13,947 | 14,918 | -971 | -6.51 | 8.16 |
| 7 | Baleno | 13,784 | 16,293 | -2,509 | -15.40 | 8.06 |
| 8 | Eeco | 13,200 | 10,589 | 2,611 | 24.66 | 7.72 |
| 9 | Victoris | 12,300 | 0 | 12,300 | 7.19 | |
| 10 | G Vitara | 11,339 | 10,148 | 1,191 | 11.74 | 6.63 |
| 11 | Alto | 10,600 | 7,467 | 3,133 | 41.96 | 6.20 |
| 12 | XL6 | 2,445 | 2,483 | -38 | -1.53 | 1.43 |
| 13 | Ignis | 2,316 | 2,203 | 113 | 5.13 | 1.35 |
| 14 | S Presso | 1,747 | 2,283 | -536 | -23.48 | 1.02 |
| 15 | Celerio | 1,392 | 2,379 | -987 | -41.49 | 0.81 |
| 16 | Jimny | 802 | 988 | -186 | -18.83 | 0.47 |
| 17 | Invicto | 410 | 434 | -24 | -5.53 | 0.24 |
| 18 | Ciaz | 0 | 597 | -597 | -100.00 | 0.00 |
| - | Total | 1,70,971 | 1,41,312 | 29,659 | 20.99 | 100.00 |
ஆனால், 13,982 வேகன்ஆர் (WagonR) கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்த 2024 நவம்பரை விட இது 5% வளர்ச்சியைக் காட்டுகிறது. ஆனால், பிரெஸ்ஸா (Brezza) மற்றும் பலேனோ (Baleno) கார்களின் தேவை கடந்த நவம்பரில் சரிந்தது. பிரெஸ்ஸா 13,947 யூனிட்களையும், பலேனோ 13,784 யூனிட்களையும் மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளன. எனினும், பிரெஸ்ஸா 2025 அக்டோபரை காட்டிலும் 16% வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
புதிய பிரெஸ்ஸா அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஈக்கோ (Eeco) வேன் கடந்த மாதத்தில் 13,200 யூனிட்கள் விற்பனை உடன் இந்த வரிசையில் 8வது இடத்தை பிடித்துள்ளது. இது 2024 நவம்பரை விட 25% அதிகரிப்பு; ஆனால் 2025 அக்டோபரை விட 2% சரிவு ஆகும். கடந்த 2025 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விக்டோரிஸ் (Victoris), கடந்த நவம்பரில் 12,300 யூனிட்கள் விற்பனையாகி, முந்தைய அக்டோபர் மாதத்தை விட 9% சரிவைக் கண்டுள்ளது.
| No | Maruti Suzuki Cars | Nov-25 | Oct-25 | Diff | Growth % MoM | % Share Oct 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Dzire | 21,082 | 20,791 | 291 | 1.40 | 11.79 |
| 2 | Swift | 19,733 | 15,542 | 4,191 | 26.97 | 8.81 |
| 3 | Ertiga | 16,197 | 20,087 | -3,890 | -19.37 | 11.39 |
| 4 | Fronx | 15,058 | 17,003 | -1,945 | -11.44 | 9.64 |
| 5 | Wagon R | 14,619 | 18,970 | -4,351 | -22.94 | 10.76 |
| 6 | Brezza | 13,947 | 12,072 | 1,875 | 15.53 | 6.85 |
| 7 | Baleno | 13,784 | 16,873 | -3,089 | -18.31 | 9.57 |
| 8 | Eeco | 13,200 | 13,537 | -337 | -2.49 | 7.68 |
| 9 | Victoris | 12,300 | 13,496 | -1,196 | -8.86 | 7.65 |
| 10 | G Vitara | 11,339 | 10,409 | 930 | 8.93 | 5.90 |
| 11 | Alto | 10,600 | 6,210 | 4,390 | 70.69 | 3.52 |
| 12 | XL6 | 2,445 | 3,611 | -1,166 | -32.29 | 2.05 |
| 13 | Ignis | 2,316 | 2,645 | -329 | -12.44 | 1.50 |
| 14 | S Presso | 1,747 | 2,857 | -1,110 | -38.85 | 1.62 |
| 15 | Celerio | 1,392 | 1,322 | 70 | 5.30 | 0.75 |
| 16 | Jimny | 802 | 592 | 210 | 35.47 | 0.34 |
| 17 | Invicto | 410 | 301 | 109 | 36.21 | 0.17 |
| 18 | Ciaz | 0 | 0 | 0 | 0.00 | 0.00 |
| - | TOTAL | 1,70,971 | 1,76,318 | -5,347 | -3.03 | 100.00 |
தொடர்ந்து இரண்டாவது மாதமாக விக்டோரிஸ், கிராண்ட் விட்டாராவை (11,339 யூனிட்கள்) விற்பனையில் முந்தி உள்ளது. ஆல்டோ கார் 10,600 யூனிட்கள் விற்பனை உடன் சிறந்த விற்பனையை பதிவு செய்துள்ளது. இது 2024 நவம்பரை காட்டிலும் 42% மற்றும் 2025 அக்டோபரை காட்டிலும் 71% என இரண்டிலும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
இந்த விற்பனைப் பட்டியலில் பின்தங்கிய மாருதி சுஸுகி கார்களில் எக்ஸ்.எல்6 (XL6) (2,445), இக்னிஸ் (Ignis) (2,316), எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) (1,747) ஆகியவை அடங்கும். இவற்றுடன் கடந்த நவம்பர் மாதத்தில் 1,392 செலெரியோ கார்கள், 802 ஜிம்னி வாகனங்கள் மற்றும் 410 இன்விடோ கார்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி நாட்டின் கார்கள் விற்பனையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எந்த அளவிற்கு என்றால், கடந்த ஆண்டு நவம்பரை விட இந்த ஆண்டு நவம்பரில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் கார்களை மாருதி சுஸுகி அதிகமாக விற்பனை செய்துள்ளது. இருப்பினும், கடந்த அக்டோபரை காட்டிலும் நவம்பரில் 5,300க்கும் அதிகமான கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டிருப்பது இந்த நிறுவனத்திற்கு சற்று கவலையளிக்க கூடியதாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications








