எமனே எதிர்ல வந்தாலும் எதுத்து நிக்கும்! விலை இவ்ளோதானா! டாடாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறும் மாருதி கார்கள்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி செலிரியோ கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பால், சமீபத்தில் மோதல் சோதனைக்கு (Crash Test) உட்படுத்தப்பட்டது.

அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி செலிரியோ கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில், 34க்கு 18.04 புள்ளிகளை ஸ்கோர் செய்துள்ளது. இதன் மூலம் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) மாருதி சுஸுகி செலிரியோ பெற்றுள்ளது.

Maruti Suzuki Celerio Crash Test

மறுபக்கம் குழந்தைகளுக்கான பாதுகாப்பில், மாருதி சுஸுகி செலிரியோ கார், 49க்கு 18.57 புள்ளிகளை ஸ்கோர் செய்துள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 2 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே மாருதி சுஸுகி செலிரியோ பெற்றுள்ளது. பொதுவாக பார்த்தால், இது சற்று சுமாரான செயல்பாடு போல தோன்றலாம்.

ஆனால் உண்மையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் பாதுகாப்பு தற்போது மேம்பட்டுள்ளது. மாருதி சுஸுகி செலிரியோ காரின் அனைத்து வேரியண்ட்களிலும் தற்போது 6 ஏர்பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகள் (Safety Features) தற்போது ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.

Maruti Suzuki Celerio Side View

குளோபல் என்சிஏபி அமைப்பு இந்த புதிய வெர்ஷனைதான் தற்போது மோதல் சோதனைக்கு உட்படுத்தியது. முன்னதாக மாருதி சுஸுகி செலிரியோ காரின் 2 ஏர்பேக்குகள் மட்டுமே கொண்ட பழைய வெர்ஷனையும் மோதல் சோதனைக்கு உட்படுத்தியிருந்தது. அப்போது மாருதி சுஸுகி செலிரியோ கார், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 2 ஸ்டார்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 1 ஸ்டாரையும் மட்டுமே பெற்றிருந்தது.

ஆனால் அது தற்போது முறையே 3 ஸ்டார்கள் ஆகவும், 2 ஸ்டார்கள் ஆகவும் உயர்ந்துள்ளது. சமீப காலமாகவே மாருதி சுஸுகி நிறுவன கார்களின் பாதுகாப்பு வெகுவாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதற்கு மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) மற்றும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) ஆகிய 2 கார்களை உதாரணமாக கூற முடியும்.

இந்த 2 கார்களும், பாரத் என்சிஏபி (Bharat NCAP) மற்றும் குளோபல் என்சிஏபி என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன தற்போதைய நிலையில் டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்களின் கார்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன.

இந்த 2 நிறுவனங்களின் பல்வேறு கார்கள், குளோபல் என்சிஏபி மற்றும் பாரத் என்சிஏபி என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும் சிறப்பாக செயல்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம். மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றும்பட்சத்தில், தனது கார்களின் பாதுகாப்பை இன்னும் வெகுவாக மேம்படுத்தி கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனம் தயாரிப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். இப்படி குறைவான விலையில் கிடைக்கும், அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய காரின் பாதுகாப்பு மேம்பட்டு வருவது வரவேற்கத்தக்க ஒரு விஷயம்தான்.

More from DriveSpark

Article Published On: Monday, December 22, 2025, 18:06 [IST]
English summary
Maruti suzuki celerio 3 star global ncap safety rating check all details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+