35 கிமீ மைலேஜ்! விலை வெறும் 5 லட்சம்தான்! ஜிஎஸ்டி வரி குறைப்பால் நடக்க போகும் அதிசயம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற பெரும்பாலான கார்களை போல் அல்லாமல், செலிரியோ காரின் விற்பனை மிகவும் மந்தமாகவே இருந்து வருகிறது.
வி3 கார்ஸ் தளம் வெளியிட்டுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2025-26ம் நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் (ஏப்ரல் முதல் ஜூலை வரை), இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக வெறும் 6,765 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதாவது நடப்பு 2025-26ம் நிதியாண்டின் முதல் 4 மாதங்களில், ஒவ்வொரு மாதமும் சராசரியாக வெறும் 1,691 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்திய சந்தையில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் விற்பனையாகும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக செலிரியோ உள்ளது.
ஆனால் வரும் மாதங்களில், மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஜிஎஸ்டி (GST) வரி குறைப்புதான் இதற்கு காரணம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப விலை 5.64 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 7.37 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். தற்போதைய நிலையிலேயே மாருதி சுஸுகி செலிரியோ மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாகதான் உள்ளது. ஆனால் ஜிஎஸ்டி வரி குறைப்பால், இதன் விலை மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஜிஎஸ்டி வரி குறைப்பு வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. எனினும் அதற்கு முன்னதாக தற்போதே பல்வேறு கார் நிறுவனங்களும், தங்களது கார்களின் விலை எவ்வளவு குறையவுள்ளது? என்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகின்றன. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
இருப்பினும் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விலை எவ்வளவு குறையலாம்? என்ற கணிப்பு இருக்கிறது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை சுமார் 50 ஆயிரம் ரூபாய் குறைந்து, வெறும் 5.14 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம்.
அதே நேரத்தில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் டாப் வேரியண்ட்டின் விலை சுமார் 70 ஆயிரம் ரூபாய் குறைந்து, வெறும் 6.40 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை கணிப்பு மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை, நாம் காத்திருப்பது அவசியம்.
மாருதி சுஸுகி செலிரியோ கார் விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜ் வழங்க கூடியதாகவும் உள்ளது. இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல ஆப்ஷனாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios), ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter), டாடா பன்ச் (Tata Punch), நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் ரெனால்ட் கைகர் (Renault Kiger) ஆகிய கார்களுக்கு எல்லாம் மாருதி சுஸுகி செலிரியோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








