35 கிமீ மைலேஜ் குடுக்கற காரை எப்டி இவ்ளோ கம்மியான ரேட்ல விக்கறாங்க! அதான் ஷோரூம்ல கூட்டம் குவிஞ்சிட்டு இருக்கு
இந்தியாவில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு (Hatchback Cars) என்று தனியாக மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது. இவை அளவில் சிறியதாக இருக்கும் என்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் எளிதாக ஓட்டலாம். சிரமம் இல்லாமல் பார்க்கிங்கும் செய்யலாம். அத்துடன் ஹேட்ச்பேக் ரக கார்களின் விலையும் குறைவுதான். ஆனால் மைலேஜ் அதிகம். இதுபோன்ற காரணங்களால்தான், ஹேட்ச்பேக் கார்களை வாடிக்கையாளர்கள் பலர் விரும்பி வாங்குகின்றனர். அதிலும் குறிப்பாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஹேட்ச்பேக் கார்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
அப்படி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றுதான் செலிரியோ (Maruti Suzuki Celerio). இந்த கார் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனையில் 203 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

ஏனெனில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 247 செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 748 ஆக உயர்ந்துள்ளது. இது 203 சதவீத வளர்ச்சி ஆகும். தற்போது வெளியாகியுள்ள மாருதி சுஸுகி செலிரியோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.
மாருதி சுஸுகி செலிரியோ கார் மிகவும் விலை குறைவானது என்பதுடன், நல்ல மைலேஜூம் வழங்க கூடியது. இன்னும் சொல்லப்போனால் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுவதிலேயே மிகவும் அதிகமான மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி செலிரியோவை குறிப்பிட முடியும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.36 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 7.04 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
அதே சமயம் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் சிட்ரோன் சி3 (Citroen C3) போன்ற கார்கள் உடன், மாருதி சுஸுகி செலிரியோ போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முதல் முறையாக புதிய காரை வாங்க போகிறவர்களுக்கு, மாருதி சுஸுகி செலிரியோ நல்ல ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. அத்துடன் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய காரை எதிர்பார்க்க கூடிய நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கும் மாருதி சுஸுகி செலிரியோ ஏற்றதுதான்.
7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், கீலெஸ் எண்ட்ரி மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்ற வசதிகளும் (Features), மாருதி சுஸுகி செலிரியோ காரில் வழங்கப்படுகின்றன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








