35 கிமீ மைலேஜ் தரும் இந்த காரோட விலை வெறும் அஞ்சர லட்சம்தானா! ஆனாலும் ஒருத்தரும் வாங்க மாட்றாங்க! ஏன் தெரியுமா
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார்களில் (Hatchback Cars) ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). இது ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய, அதே நேரத்தில் நல்ல மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார் ஆகும். இருப்பினும் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை மந்தமாகவே இருந்து கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், பிரபலமானது என்றாலும் கூட, இது மிகவும் குறைவான எண்ணிக்கையில் விற்பனையாகி கொண்டுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக இருக்கிறது.
நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதமும் மாருதி சுஸுகி செலிரியோ கார் விற்பனையில் சோபிக்கவில்லை. தற்போது வெளியாகியுள்ள இந்த காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது நமக்கு தெரிய வந்துள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 2,268 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் அதற்கு முந்தைய பிப்ரவரி மாதம், அதாவது நடப்பு 2025ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், 4,226 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் மாருதி சுஸுகி செலிரியோ கார் விற்பனையில் 46.33 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் (LXI) விலை வெறும் 5.64 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காருடைய டாப் வேரியண்ட்டின் (ZXI+ AGS) விலையும் கூட வெறும் 7.37 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இவ்வளவு குறைவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் மட்டுமல்லாது, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இது நல்ல மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்திய சந்தையில் கிடைக்க கூடிய அதிக மைலேஜ் வழங்கும் கார்களில் மாருதி சுஸுகி செலிரியோ முக்கியமானதாகும்.
மாருதி சுஸுகி செலிரியோ காரின் சிஎன்ஜி வேரியண்ட் (VXi MT) ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. குறைவான விலை, அதிக மைலேஜ் என்ற போதிலும் கூட, மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை மந்தமாகவே இருந்தது.
எனவே செலிரியோ காரின் பாதுகாப்பை (Safety) மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் மேம்படுத்தியது. இதன்படி மாருதி சுஸுகி செலிரியோ காரில் தற்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. அதாவது ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும், 6 ஏர்பேக்குகள் இருக்கும்.
ஆனால் முன்பு மாருதி சுஸுகி செலிரியோ காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 2 ஏர்பேக்குகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. பாதுகாப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த மிகப்பெரிய அப்டேட்டிற்கு பிறகு மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அது நடக்கவில்லை என்பது தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் மூலம் தெரிய வந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி செலிரியோ காரின் இன்டீரியர், கட்டுமான தரம் மற்றும் டிசைன் ஆகியவை எல்லாம் நன்றாக இல்லை என வாடிக்கையாளர்கள் பலரும் கருதுகின்றனர். இதன் காரணமாகவே மாருதி சுஸுகி செலிரியோ விற்பனையில் 'டல்' அடித்து கொண்டிருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








