35 கிமீ மைலேஜ்! புதிய விலை இவ்ளோதானா! பைக் ரேஞ்சுக்கு குறைஞ்சிருச்சு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் அதிகமான மைலேஜ் (Mileage) வழங்கும் கார்களில் ஒன்றாகும். மாருதி சுஸுகி செலிரியோ கார் 4 விதமான மைலேஜை வழங்குகிறது.

அதாவது இதன் LXi மேனுவல் வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 25.24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. அதே நேரத்தில் VXi மேனுவல், ZXi மேனுவல், ZXi ப்ளஸ் மேனுவல் ஆகிய வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. மறுபக்கம் VXi ஆட்டோமேட்டிக், ZXi ஆட்டோமேட்டிக் மற்றும் ZXi ப்ளஸ் ஆட்டோமேட்டிக் ஆகிய வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 26 கிலோ மீட்டர் மைலேஜ் குடுக்கின்றன.

Maruti Suzuki Celerio Interior

இவை அனைத்துமே பெட்ரோல் வேரியண்ட்கள் ஆகும். அதே நேரத்தில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் சிஎன்ஜி இன்ஜின் பொருத்தப்பட்ட VXi மேனுவல் வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மைலேஜ் ஆகும்.

சிறப்பான மைலேஜ் தவிர ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் அஸிஸ்ட் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஏபிஎஸ் பிரேக் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features) மாருதி சுஸுகி செலிரியோ கார் கொண்டுள்ளது.

Maruti Suzuki Celerio Side View

அத்துடன் 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், இன்ஜின் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், தேவைப்பட்டால் அதிக பொருட்களை வைத்து கொள்வதற்கு ஏதுவாக பின் பகுதியில் 60:40 ஸ்பிளிட் இருக்கைகள் மற்றும் ஸ்டியரிங் வீலில் ஆடியோ கண்ட்ரோல்கள் ஆகிய வசதிகளையும் மாருதி சுஸுகி செலிரியோ கார் பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 5.64 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஆனால் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ள காரணத்தால், மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் புதிய விலை வெறும் 4.70 லட்ச ரூபாயாக குறைந்துள்ளது (இது ஒரு சில பிரீமியம் பைக்குகளை விட குறைவான விலை). அதாவது மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 94 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. இது குறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் மாருதி சுஸுகி செலிரியோ காரின் வேரியண்ட் வாரியான அதிகாரப்பூர்வ புதிய விலை பட்டியல் நமக்கு இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. எனினும் ஆரம்ப நிலை வேரியண்ட்டை போலவே, இந்த காரின் மற்ற வேரியண்ட்களின் விலையும் வெகுவாக குறைந்திருக்கும் என நாம் உறுதியாக நம்பலாம்.

எனினும் அதிகாரப்பூர்வமான புதிய விலை பட்டியல் வெளியாகும் வரை நாம் காத்திருப்பது நல்லது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் டாப் வேரியண்ட்டின் விலை 7.37 லட்ச ரூபாயாக உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த விலை குறையும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரை எதிர்பார்க்க கூடிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி செலிரியோ மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. விலை வெகுவாக குறைக்கப்பட்டுள்ள காரணத்தால், இனி வரும் மாதங்களில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை எண்ணிக்கை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 19, 2025, 23:07 [IST]
English summary
Maruti suzuki celerio new price after gst cut all details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+