ஒரு காலத்துல ராஜா மாதிரி இருந்துச்சு! 35 கிமீ மைலேஜ் காரை அடி மாட்டு விலையில் வித்துட்டு இருக்காங்க!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) திகழ்கிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் 5 இலக்க எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. ஆனால் மறுபக்கம் ஒரு சில கார்கள் ஒவ்வொரு மாதமும் சொற்ப விற்பனை எண்ணிக்கையை மட்டுமே பதிவு செய்து கொண்டுள்ளன. இதில், மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) ஒன்றாகும். பொதுவாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) வாகன திருவிழாவில், (முன்பு 2 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வந்தது) மாருதி சுஸுகி ஏராளமான கார்களை அறிமுகப்படுத்தும்.

அப்படி கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ வாகன திருவிழாவில்தான், ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரான, மாருதி சுஸுகி செலிரியோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஹேட்ச்பேக் கார் என்ற பெருமை மாருதி சுஸுகி செலிரியோவிற்கு உள்ளது.

Maruti Suzuki Celerio Side View

ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன், குறைவான விலை, நிறைவான மைலேஜ் உள்ளிட்ட காரணங்களால், இந்திய மார்க்கெட்டில் மாருதி சுஸுகி செலிரியோ உடனடியாக 'ஹிட்' அடித்தது. அதாவது 'லான்ச்' செய்யப்பட்ட ஒரு வருடத்திலேயே சுமார் 1 லட்சம் மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டன.

ஆனால் இந்தியாவின் மிடில்-க்ளாஸ் மக்களை இலக்காக கொண்டு களமிறக்கப்பட்ட மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை தற்போது 'டல்' அடிக்கிறது. ஒரு சில மாதங்களில் 2 ஆயிரம் என்ற விற்பனை எண்ணிக்கையை கடக்கவே மாருதி சுஸுகி செலிரியோ திணறி கொண்டுள்ளது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் விதிவிலக்கு அல்ல.

Maruti Suzuki Celerio

நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 1,474 செலிரியோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3,220 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 54 சதவீத வீழ்ச்சி ஆகும். அதாவது விற்பனை கிட்டத்தட்ட சரி பாதியாக குறைந்துள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போதுதான் வீழ்ச்சி என்றால், நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டாலும், மாருதி சுஸுகி செலிரியோ விற்பனையில் வீழ்ச்சியையே சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 2,268 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் இந்த எண்ணிக்கை, அதன் பின் வந்த ஏப்ரல் மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, வெறும் 1,474 ஆக குறைந்துள்ளது. இந்த வகையில் பார்த்தால், மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை 35.01 சதவீதம் குறைந்துள்ளது. இத்தனைக்கும் மாருதி சுஸுகி செலிரியோ மிகவும் குறைவான விலையில் கிடைக்க கூடிய கார்களில் ஒன்றாகும்.

வெறும் 5.64 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை உங்களால் வாங்கி விட முடியும். அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 7.37 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

அத்துடன் இந்த காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறுகிறது. குறைவான விலை மற்றும் நிறைவான மைலேஜ் என்ற போதிலும், மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை மந்தமாக இருந்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை குறைவான கார்களின் மீது இந்திய வாடிக்கையாளர்களின் ஆர்வம் குறைந்திருப்பதும், ஹேட்ச்பேக் சந்தையில் போட்டி மிக கடுமையாக மாறியிருப்பதும் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை மந்தமாக இருப்பதற்கு மிகவும் முக்கியமான காரணங்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

Article Published On: Tuesday, May 20, 2025, 17:33 [IST]
English summary
Maruti suzuki celerio sales report april 2025 54 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+