35 கிமீ மைலேஜ் குடுக்கற காரை தரமட்ட ரேட்ல வித்துட்டு இருக்காங்க! பைக் வாங்கறதுக்கு பதிலா இந்த காரை வாங்கீரலாம்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). இதன் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி செலிரியோ கார், நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4,226 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 3,586 ஆக மட்டுமே இருந்தது. இது 18 சதவீத வளர்ச்சி ஆகும்.

வருடாந்திர ரீதியில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் மாருதி சுஸுகி செலிரியோ கார் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ஆம், நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் வெறும் 1,954 செலிரியோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

Maruti Suzuki Celerio

ஆனால் இந்த எண்ணிக்கை, அதன்பின் வந்த பிப்ரவரி மாதத்தில், 4,226 ஆக உயர்ந்துள்ளது. 53.76 சதவீத வளர்ச்சி ஆகும். மாருதி சுஸுகி செலிரியோ காரில், தற்போது 6 ஏர்பேக்குகள் வசதி ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. அதாவது ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும், 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகிறது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, செலிரியோ காரின் விற்பனை உயர்விற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது கார்களின் பாதுகாப்பு வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளனர். இதை மாருதி சுஸுகி நிறுவனம் நன்றாக உணர்ந்துள்ளது.

Maruti Suzuki Celerio Side View

இதன் அடிப்படையில் மாருதி சுஸுகி செலிரியோ காரில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் என்ற வசதி உண்மையிலேயே நன்றாக வேலை செய்ய தொடங்கியுள்ளது. எனவே இனி வரும் காலங்களிலும் மாருதி சுஸுகி செலிரியோ கார் விற்பனையில் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் (LXI) விலை 5.64 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் (ZXI+ AGS) விலை 7.37 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி செலிரியோ காரின் சிஎன்ஜி வேரியண்ட் (VXI MT) ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது. பாதுகாப்பு, சரியான விலை நிர்ணயம் மற்றும் மைலேஜ் போன்ற காரணிகள் அனைத்தும் ஒருங்கிணைந்துதான், மாருதி சுஸுகி செலிரியோ காரை தற்போது வளர்ச்சி பாதையில் பயணிக்க வைத்து கொண்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில், அதிக மைலேஜ் வழங்க கூடிய காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி செலிரியோ ஏற்றது. குறிப்பாக முதல் முறையாக ஒரு புதிய காரை வாங்க போகும் வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி செலிரியோ காரை பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 15, 2025, 22:46 [IST]
English summary
Maruti suzuki celerio sales report february 2025 18 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+