35 கிமீ மைலேஜை வாரி வழங்கும் கார்! வெறும் அஞ்சரை லட்சத்துக்கு விக்கறாங்களா! பாதுகாப்பிலும் நின்னு பேசும்!
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் எது? என கேட்டால், பச்சை குழந்தை கூட, மாருதி சுஸுகி (Maruti Suzuki) என யோசிக்காமல் பதில் சொல்லும். ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அனைத்து கார்களும் பிரம்மாண்டமான எண்ணிக்கையில் விற்பனையாவதில்லை. ஒரு சில கார்களின் விற்பனை எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது. மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) இந்த ரகத்தை சேர்ந்தது. ஆம், மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை எண்ணிக்கை குறைவாகவே இருந்து கொண்டுள்ளது.
ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுஸுகி செலிரியோ கார் விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள மாருதி சுஸுகி செலிரியோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் தெரியவந்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 748 செலிரியோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, அதன் பின் வந்த ஜனவரி மாதம் 1,954 ஆக உயர்ந்துள்ளது. இது 61.72 சதவீத வளர்ச்சி ஆகும்.
இனி வரும் மாதங்களில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் மாருதி சுஸுகி நிறுவனம் செலிரியோ காரின் பாதுகாப்பு வசதிகளை அதிகரித்துள்ளது. ஆம், மாருதி சுஸுகி செலிரியோ காரின் அனைத்து வேரியண்ட்களிலும் தற்போது 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

அதாவது ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை இனி அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் கிடைக்கும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கை இனி வரும் காலங்களில் செலிரியோ காரின் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.
செலிரியோ காரானது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் அரேனா (Arena) ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் ஆகும். தற்போதைய நிலையில் வெறும் 5.64 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையிலேயே மாருதி சுஸுகி செலிரியோ காரை உங்களால் வாங்கி விட முடியும்.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட, 7.37 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இது விலை குறைவான கார் என்பதுடன், அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய ஒரு காராகவும் திகழ்கிறது. இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான, அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி செலிரியோவை குறிப்பிடலாம். இவை இரண்டும் இந்த காரின் மிக முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்கள். இந்த வரிசையில் தற்போது மாருதி சுஸுகி செலிரியோ காரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே இனி வரும் மாதங்களில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. குறைவான விலையில், நல்ல மைலேஜ் மற்றும் பாதுகாப்பு கிடைக்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி செலிரியோ நல்ல ஆப்ஷன்.


Click it and Unblock the Notifications








