6 ஏர்பேக்கோட 35 கிமீ மைலேஜ் தர்ற கார் விலை இவ்ளோதானா! ஜிஎஸ்டி குறைஞ்சதும் ரேட் இன்னும் தரமட்டத்துக்கு போயிரும்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. ரஸ்லேன் தளம் வெளியிட்டுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் 1,392 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 2,465 ஆக இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1,073 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 43.53 சதவீத வீழ்ச்சி ஆகும்.

Maruti Suzuki Celerio Side View

வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் கூட, மாருதி சுஸுகி செலிரியோ கார் மிக கடுமையான வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 2,038 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த ஜூலை மாதத்தில் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி வெறும் 1,392 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதத்தில், 646 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 31.70 சதவீத வீழ்ச்சி ஆகும். இத்தனைக்கும் மாருதி சுஸுகி செலிரியோ கார் மிகவும் விலை குறைவானது ஆகும்.

Maruti Suzuki Celerio

மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.64 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 7.37 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

விலை குறைவானது என்பதுடன், மாருதி சுஸுகி செலிரியோ அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாகவும் உள்ளது. இதன் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனை தேர்வு செய்தால், உங்களுக்கு ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும். இது மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவிக்கும் மைலேஜ் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

எனினும் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது கிட்டத்தட்ட இதே அளவிற்கான மைலேஜ் கிடைப்பதாக மாருதி சுஸுகி செலிரியோ காரின் உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். மைலேஜ் விஷயத்தில் மாருதி சுஸுகி கார்களை அடித்து கொள்ள முடியாது என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஆனால் மைலேஜிற்காக நீங்கள் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள தேவை கிடையாது. ஏனெனில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் எந்த வேரியண்ட்டை நீங்கள் தேர்வு செய்தாலும், 6 ஏர்பேக்குகள் இருக்கும். அதாவது விலை, மைலேஜ் மற்றும் பாதுகாப்பு என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் கிட்டத்தட்ட அனைத்து விஷயங்களையும் மாருதி சுஸுகி செலிரியோ பூர்த்தி செய்கிறது.

இருப்பினும் இந்தியாவில் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் செக்மெண்ட்டை சேர்ந்த கார்களுக்கு மவுசு குறைந்து கொண்டே வருகிறது. இது போன்ற காரணங்களால், மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை மந்தமாக உள்ளது. எனினும் இந்த சரிவில் இருந்து மாருதி சுஸுகி செலிரியோ வரும் மாதங்களில் மீண்டு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில், 6 ஏர்பேக்குகள் உடன், அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி செலிரியோ நல்ல ஆப்ஷன். மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரம்மாண்டமான சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் ஓரளவிற்கு விலை குறைவான உதிரி பாகங்களின் விலை ஆகிய அம்சங்கள் எல்லாம் இந்த காரை பராமரிப்பதையும் எளிமையாக்குகின்றன.

இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது. கார்களுக்கான ஜிஎஸ்டி (GST) வரி விரைவில் குறையவுள்ளது. இதன் காரணமாக மாருதி சுஸுகி செலிரியோ காரின் விலை 10 சதவீதம் வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடக்கும்பட்சத்தில், மாருதி சுஸுகி செலிரியோ காரை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 27, 2025, 23:34 [IST]
English summary
Maruti suzuki celerio sales report july 2025 43 53 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+