இந்த கார் மட்டும் பார்முக்கு வந்துச்சுனா பைக் கம்பெனிய எல்லாம் இழுத்து மூட வேண்டியது வரும்! அவ்ளோ மைலேஜ் தருது

இந்திய கார் வாடிக்கையாளர்கள் மைலேஜிற்கு (Mileage) அதிக முக்கியத்துவம் வழங்க கூடியவர்கள் என்பது உலகம் அறிந்த ஒரு விஷயம். அப்படி புதிய கார் வாங்கும்போது, மைலேஜ்தான் மிகவும் முக்கியம் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்களுக்காகவே அறிமுகம் செய்யப்பட்ட ஒரு கார்தான் மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio).

இன்றைய தேதியில் இந்தியாவில் கிடைக்க கூடிய அதிக மைலேஜ் வழங்கும் கார்களின் பட்டியலை தயாரித்தால், அது மாருதி சுஸுகி செலிரியோ முன்னணி ஒன்றாக இருக்கும். ஆம், இதன் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜை வாரி வழங்குகின்றன.

Maruti Suzuki Celerio Side View

இது மாருதி சுஸுகி நிறுவனத்தால் தெரிவிக்கப்படும் மைலேஜ் ஆகும். மைலேஜில் 'கிங்' ஆக இருக்கும் அதே நேரத்தில், பாதுகாப்பிலும் சேர்த்தே மாருதி சுஸுகி செலிரியோ தலை சிறந்து விளங்குகிறது. ஏனெனில் இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

இதை எல்லாம் பார்த்து, ஒரு வேளை மாருதி சுஸுகி செலிரியோ காரின் விலை மிகவும் அதிகமாக இருக்கலாம் என நீங்கள் நினைக்க கூடும். ஆனால் இது உண்மையல்ல. மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.64 லட்ச ரூபாய் மட்டுமே.

Maruti Celerio

அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையோ 7.37 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் இப்படி ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் இருந்தும் என்ன பயன்? செலிரியோ கார் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தருவதில்லை.

தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அதன் விற்பனை எண்ணிக்கை மந்தமாகவே உள்ளது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு மே மாதமும் விதிவிலக்கு அல்ல. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் வெறும் 1,861 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் இந்த எண்ணிக்கை 3,314 ஆக இருந்தது. இது 44 சதவீத வீழ்ச்சி ஆகும். ஆனால் ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை எண்ணிக்கை சற்றே உயர்ந்துள்ளது.

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,474 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன்பின் வந்த மே மாதம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 1,861 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த வகையில் பார்த்தால், 20.80 சதவீத வளர்ச்சியை செலிரியோ பதிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் விற்பனை எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், இந்த வளர்ச்சியை மாருதி சுஸுகி செலிரியோ தக்க வைத்து கொள்ளுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு வேளை செலிரியோ வளர்ச்சி பாதையில் பயணிக்க ஆரம்பித்தால், அது மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்த கூடிய விஷயமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 17, 2025, 23:08 [IST]
English summary
Maruti suzuki celerio sales report may 2025 44 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+