35 கிமீ மைலேஜ்! விலை வெறும் 4.70 லட்சம்தான்! ஆனா ஷோரூம் காத்து வாங்கீட்டு இருக்கு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). இதன் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 1,392 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,379 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 987 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன.

Maruti Suzuki Celerio Interior

இதன் மூலம் மாருதி சுஸுகி செலிரியோ கார் விற்பனையில் 41 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 4.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 6.73 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். மறுபக்கம் மாருதி சுஸுகி செலிரியோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.

Maruti Suzuki Celerio Side View

விலை குறைவானது மற்றும் அதிக மைலேஜ் வழங்க கூடியது என்றாலும் கூட, மாருதி சுஸுகி செலிரியோ கார் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால் மாருதி சுஸுகி செலிரியோ கார் விற்பனையில் வீழ்ச்சியை சந்திப்பது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. பெரும்பாலான மாதங்களில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை மிகவும் மந்தமாகதான் இருந்து வருகிறது.

இந்தியாவில் தற்போது விலை குறைவான சிறிய ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை மந்தமாக இருந்து வருவதற்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மாருதி சுஸுகி செலிரியோ கார் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features), மாருதி சுஸுகி செலிரியோ காரில் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) மற்றும் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி செலிரியோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது. அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் போன்ற கார்களுக்கும் கூட மாருதி சுஸுகி செலிரியோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாகதான் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, December 15, 2025, 23:58 [IST]
English summary
Maruti suzuki celerio sales report november 2025 41 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+