35 கிமீ மைலேஜ்! ஆனா விலை முழுசா 5 லட்சம் கூட இல்ல! இதுக்கு மேலயும் பைக்லாம் வாங்கணுமா!
இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). இருப்பினும் இதன் விற்பனை பெரும்பாலான மாதங்களில் மிகவும் மந்தமாகவே உள்ளது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதமும் விதிவிலக்கு அல்ல.
மாருதி சுஸுகி செலிரியோ காரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1,322 செலிரியோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 3,044 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 1,722 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 57 சதவீத வீழ்ச்சி ஆகும்.
ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பு மற்றும் பண்டிகை காலம் ஆகிய 2 காரணங்களால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்தியாவில் கார் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்திலும் கூட, மாருதி சுஸுகி செலிரியோ விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

விலை குறைவான சிறிய கார்களை இந்திய வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. மாருதி சுஸுகி செலிரியோ மட்டுமல்லாது, மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் இன்னும் ஏராளமான ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களும் விற்பனையில் வீழ்ச்சியைதான் சந்தித்து கொண்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மாருதி சுஸுகி செலிரியோவை பொறுத்தவரையில், அது அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகும். செலிரியோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.
இது அதிக மைலேஜ் வழங்க கூடியது மட்டுமல்லாது, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், மிகவும் விலை குறைவானதும் கூட. மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி பார்த்தால், செலிரியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.73 லட்ச ரூபாயாக மட்டும்தான் இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை மந்தமாக இருப்பது வருத்தமான ஒரு விஷயம்தான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) மற்றும் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி செலிரியோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. அத்துடன் பைக்குகளில் இருந்து அப்டேட் ஆகி, முதல் முறையாக ஒரு புதிய காரை வாங்குபவர்களுக்கும் கூட, மாருதி சுஸுகி செலிரியோ நல்ல ஆப்ஷன்தான்.


Click it and Unblock the Notifications








