35 கிமீ மைலேஜ்! விலை 4.70 லட்சம்தான்! ஆனா சும்மா குடுத்தா கூட இந்த காரை யாரும் வாங்க மாட்டாங்கலாட்ட இருக்கு!
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் பெரும்பாலான கார்களின் விற்பனை, தற்போது மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால் ஒரு நாணயத்திற்கு 2 பக்கங்கள் என்பதை போல், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒரு சில கார்கள் விற்பனையில் தடுமாறவும் செய்கின்றன.
இதற்கு மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) ஒரு உதாரணம். இந்திய சந்தையில் தற்போது மாருதி சுஸுகி செலிரியோ காரின் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் விற்பனையாகி வருகின்றன. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல.

வி3 கார்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 1,033 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதம் 1,505 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த செப்டம்பர் மாதத்தில், 472 மாருதி சுஸுகி செலிரியோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 31.36 சதவீத வீழ்ச்சி ஆகும். இதன் காரணமாக இந்திய சந்தையில் மிகவும் குறைவாக விற்பனையாகும் மாருதி சுஸுகி கார்களில் ஒன்றாக செலிரியோ மாறியுள்ளது.

இத்தனைக்கும் இது மிகவும் குறைவான விலையில் கிடைக்க கூடிய, அதே நேரத்தில் அதிக மைலேஜை வாரி வழங்கும் கார்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.73 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜூம் தர கூடியது.
மாருதி சுஸுகி செலிரியோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்க 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். எனவே குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல ஆப்ஷன்.
ஆனால் இந்தியாவில் தற்போது விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களை வாடிக்கையாளர்கள் பெரிதாக விரும்புவது இல்லை. அதற்கு பதில் எஸ்யூவி ரக கார்களை வாங்குவதற்குதான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இது மாருதி சுஸுகி செலிரியோவின் சரிவிற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி செலிரியோ மிகவும் விலை குறைவானது. அதே நேரத்தில் அதிக மைலேஜூம் வழங்க கூடியது. அத்துடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பாதுகாப்பிற்கு அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் மற்றும் லக்கேஜ்களை வைத்து கொள்ள ஏதுவாக 292 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகிய அம்சங்களும் ஒருங்கிணைந்து, இந்தியாவின் மிடில்-க்ளாஸ் குடும்பங்களுக்கு ஏற்ற காராக இதை மாற்றுகின்றன.


Click it and Unblock the Notifications








