இன்னும் 15 நாளில் இந்த காரை நிறத்த போறாங்க! ஆனா இப்பதான் சேல்ஸ் குவியுது! எந்த கார் தெரியுமா?

மார்ச் மாதத்துடன், மாரூதி சுஸுகி நிறுவனம் சியாஸ் காரை நிறுத்த திட்டமிட்டுள்ளது. நமக்கு தெரிந்த தகவலின்படி உற்பத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டது, இருப்பினும் அந்நிறுவனத்தால் இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த முடிவு, இருக்கும் ஸ்டாக்கை கிளியர் செய்யும் வரை இந்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருக்கலாம். சியாஸ் சிம்மா, டெல்டா, டெல்டா ஏடி, ஜீட்டா, ஜீட்டா ஏடி, ஆல்பா மற்றும் ஆல்பா ஏடி உள்ளிட்ட 7 வேரியன்டகளில் இந்த கார் கிடைக்கிறது. தற்போது, ​​சிம்மா மற்றும் டெல்டாவுக்கான விலைகள் மட்டுமே அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன.

சியாஸின் விற்பனை சமீபத்தில் ஒரு ஆச்சரியமான அதிகரிப்பைக் கண்டுள்ளது. முந்தைய குறைந்த விற்பனை எண்களைக் கொண்டிருந்தாலும், கடந்த இரண்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், 768 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இது டிசம்பர் 2024 ஐ விட 65.52% வளர்ச்சியைக் கண்டுள்ளது. பிப்ரவரி மாதம் ஜனவரியிலிருந்து 42.84% அதிகரிப்புடன் 1,097 கார்கள் விற்பனை செய்யப்பட்டு மேலும் முன்னேற்றம் காணப்பட்டது.

Maruti Ciaz Sales

இந்த மாதம், மாரூதி விற்பனையை அதிகரிக்க அல்லது ஸ்டாக்கை காலி செய்ய சியாஸ் காருக்கு ரூ .45,000 வரை பலன்களை வழங்குகிறது. இதில் ரூ .10,000 நேரடி பணம் தள்ளுபடி மற்றும் ரூ .30,000 வரை ஸ்கிராப்பேஜ் போனஸ் வழங்கப்படுகிறது சியாஸ் காரின் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ .9.42 லட்சம் ஆகும்.

பிப்ரவரி 2024 இல், மாரூதி சுஸுகி சியாஸை புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மூன்று டுயல் கலர் ஆப்ஷன்களில் வந்தது. பெர்ல் மெட்டாலிக் ஓபுலென்ட் ரெட் வித் பிளாக் ரூஃப், பெர்ல் மெட்டாலிக் கிராண்டியர் கிரே வித் பிளாக் ரூஃப் மற்றும் டிக்னிட்டி பிரவுன். இந்த வேரியன்டிற்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இரண்டும் கிடைக்கின்றன.

Maruti Ciaz Sales

இன்ஜினை பொருத்தவரை 103bhp பவர் மற்றும் 138Nm டார்க்கை வெளியிடும் திறன் கொண்டது. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மாறாமல் உள்ளது. இது 5-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேனுவல் எடிசன் 20.65 km/l வரை மைலேஜை வழங்குகிறது, அதேசமயம் ஆட்டோமேட்டிக் 20.04 km/l வரை மைலேஜை வழங்குகிறது.

சியாஸ் இப்போது அனைத்து வேரியன்ட்களிலும் 20 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களைத் கொண்டுள்ளது. இவை ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி பிரோக்ராம் (ESP) ஆகியவை உள்ளன. டுயல் ஏர் பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX குழந்தை சீட் ஆங்கர்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் (EBD) உடன் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) போன்ற கூடுதல் அம்சங்கள் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துகின்றன.

Maruti Ciaz Sales

சமீபத்திய அப்டேட்கள் இருந்தபோதிலும், சியாஸை நிறுத்துவதற்கான முடிவு, சமீபத்திய மாதங்களில் அதன் விற்பனை எண்கள் குறைந்ததன் காரணமாக இருக்கலாம். உதாரணமாக, ஏப்ரல் 2024 இல் வெறும் 257 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன - மார்ச் மாத எண்களிலிருந்து 56.45% குறைவு.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சியாஸ் காரை பொருத்தவரை கடந்த ஆண்டின் பெரும்பகுதி முழுவதும் ஒட்டுமொத்த விற்பனை நிலையற்றதாக இருந்தது; சில மாதங்கள் வளர்ச்சியைக் காட்டின, மற்றவை ஜூன் மாதத்தில் விற்பனை மே மாத எண்களை விட -21.65% குறைந்தது போன்ற வீழ்ச்சியை சந்தித்தன. இதன் காரணமாக இந்த கார் விற்பனையிலிருந்து நிறுத்தப்படப்போவதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த காரை வாங்கும் எண்ணத்தில் இருக்கும் பலர் தற்போது வாங்குவதால் விற்பனை சற்று அதிகரித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 15, 2025, 22:30 [IST]
English summary
Maruti Suzuki will discontinue the Ciaz in April 2025, despite recent sales growth. Production has ceased as the company aims to clear stock, with significant discounts offered.
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X