ஹோண்டா சிட்டியை விட அதிகம் விற்பனையாகிட்டு இருக்கு.. இருந்தாலும் இந்த காரை தூக்கி போட முடிவு பண்ணிட்டாங்களா!!!
இந்தியாவின் செடான் கார் (Sedan Car) பிரிவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல் ஒன்று விரைவில் விற்பனையில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) கார் மாடலே அது ஆகும். இந்த தகவல் இந்திய செடான் கார் காதலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்து இருக்கின்றது. சியாஸ், இந்தியாவில் இருந்து வெளியேற இருப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே அது இந்த ஆண்டு முடிவதற்குள் விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டுவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, இந்த மார்ச் மாதம் கூட இந்த காருக்கு கடைசி மாதமாக இருக்கலாம் என பேரிடியை ஏற்படுத்தும் தகவல்களே தற்போது வெளியாகிக் உள்ளன.

ஆனால், இது இன்னும் இறுதிச் செய்யப்படாத தகவல் ஆகும். ஏனெனில் கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியை சியாஸ் கார் மாடல் இந்தியாவில் பெற்றிருக்கின்றது. 2024 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் 128 சதவீதம் விற்பனை வளர்ச்சியையே அது பெற்றுள்ளது.
அதாவது, 1,097 யூனிட்டுகள் சியாஸ் கார்களே கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனையாகி இருக்கின்றன. இந்த அதீத எண்ணிக்கையிலான விற்பனை காரணமாக சியாஸ் வெளியேற்றம் திட்டம் ஒத்தி வைக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆனால், சியாஸ் விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதை உணர்ந்தே இந்தியர்கள் இந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் வாங்கி இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

ஏனெனில், முந்தைய மாதங்களில் மாபெரும் விற்பனை வீழ்ச்சியையே இந்த கார் மாடல் நாட்டில் சந்தித்து வந்தது. குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு அக்காரின் விற்பனை அதளபாதாளத்தில் வீழ்ந்தது. இந்த மாதிரியான சூழல் காரணமாகவும், சந்தை முழுமையாக எஸ்யூவி காருக்கானதாக மாறி வருவதைக் காரணம் காட்டியே மாருதி சுஸுகி சியாஸ் காரை வெளியேற்றும் திட்டத்தில் உள்ளது.
எனவே அதிகாரப்பூர்வமாக இந்த கார் வெளியேற்றப்படும் என உறுதியாக நம்பப்படுகின்றது. உற்பத்தி பணிகள் இந்த மாதம் முழுமையாக நிறுத்தப்பட்டு, பின்னர், ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த கார் விற்பனையில் இருந்தும் அகற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் மாருதி சுஸுகி சியாஸ், ஹோண்டா சிட்டி போன்ற ஜாம்பவான் கார் மாடல்களுக்கு பெருத்த சவாலை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

சென்ற பிப்ரவரி மாதத்தில் ஹோண்டா சிட்டி 889 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியது. இதைவிட 200க்கும் அதிகமான யூனிட்டே சியாஸ் அந்த மாதத்தில் விற்பனையாகியது. இத்தகைய மாபெரும் கடுமையான போட்டியை வழங்கிக் கொண்டிருக்கும் சியாஸ் காரே விற்பனையில் இருந்து வெளியேற இருக்கின்றது. இதன் விளைவாக ஹோண்டா சிட்டி காரின் விற்பனை வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இருந்து சியாஸ் கார் வெளியேற இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த மார்ச் மாதத்தில் இந்த காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் விற்பனையும் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் எங்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









