கணக்கச்சிதமான மாருதி காருக்கு இணையா எந்த காரும் விற்பனையாகல! பள்ளத்துக்கும், மலைக்கும் உள்ள வித்தியாசம்!

2025 நவம்பர் மாதத்தில் கார்கள் விற்பனை 2024 நவம்பரை காட்டிலும் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, குறைவான உயரத்துடன் தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் கார்கள் விற்பனையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மொத்தம் 35,039 செடான் கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2024 நவம்பரில் விற்பனையான 24,154 செடான் கார்களுடன் ஒப்பிடுகையில் 45.06% வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

எனினும், 2025 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 5.84% குறைந்துள்ளது. பண்டிகைக் கால உத்வேகத்திற்குப் பிறகு சந்தையில் ஒரு சிறிய தளர்வைக் இது குறிக்கிறது. இருப்பினும், மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire), செடான் கார்கள் பிரிவில் தனது அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.

most selling sedan cars

2025 நவம்பரில், 21,082 கார்கள் விற்பனை உடன், இந்தியாவின் ஒட்டுமொத்த கடந்த மாத செடான் கார்கள் விற்பனையில் பெரும் பகுதியை டிசையர் பெற்றுள்ளது. இது 2024 நவம்பர் மாதத்தை விட 78.98% பிரம்மாண்டமான வளர்ச்சியையும், 2025 அக்டோபர் மாதத்தை விட 1.4% வளர்ச்சியையும் காட்டுகிறது. டிசையரின் இந்த சிறப்பான விற்பனை, இந்தியாவில் விலை குறைந்த மற்றும் மலிவு விலை செடான் கார்களுக்கு இப்போதும் பரந்த வரவேற்பு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) 5,731 யூனிட்கள் விற்பனை உடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது 2024 நவம்பரை விட 34.91% வளர்ச்சியைக் காட்டினாலும், 2025 அக்டோபரை விட விற்பனையில் 1.44% சரிவைச் சந்தித்துள்ளது. ஹோண்டா அமேஸ் (Honda Amaze), 2,763 யூனிட்கள் விற்பனை உடன் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.

most selling sedan cars

அமேஸின் இந்த விற்பனை எண்ணிக்கை 2024 நவம்பரை காட்டிலும் 5.14% அதிகரிப்பைக் காட்டினாலும், அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட அதிக டெலிவிரிக்குப் பிறகு, இந்த காரின் தேவையில் ஒரு இயல்புநிலை திரும்பி இருப்பதைக் குறிக்கும் வகையில், 23.88% என்கிற அதிகப்படியான சரிவைக் கண்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள டாடாவின் டிகோர் (Tigor) மற்றும் டிகோர் இவி கார்களின் ஒருங்கிணைந்த விற்பனை 488 யூனிட்டுகளாகக் கடுமையாகக் குறைந்துள்ளது.

இது 2024 நவம்பரை விட 43.19% சரிவையும், 2025 அக்டோபர் மாதத்தை விட 59.2% சரிவையும் பிரதிபலிக்கிறது. இவ்வளவு நேரம் நாம் பார்த்தால் எல்லாம் சிறிய அளவிலான காம்பாக்ட் செடான் கார்கள் ஆகும். நடுத்தர அளவு கொண்ட செடான் கார்களில், ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் (Volkswagen Virtus) 2,225 யூனிட்கள் விற்பனை உடன் சிறந்த விற்பனையை வெளிப்படுத்தி உள்ளது.

No Sedan Sales Nov-25 Nov-24 Diff Growth % YoY % Share Nov 25
1 Maruti Dzire 21,082 11,779 9,303 78.98 60.17
2 Hyundai Aura 5,731 4,248 1,483 34.91 16.36
3 Honda Amaze 2,763 2,628 135 5.14 7.89
4 VW Virtus 2,225 1,457 768 52.71 6.35
5 Skoda Slavia 1,120 1,131 -11 -0.97 3.20
6 Hyundai Verna 709 1,213 -504 -41.55 2.02
7 Honda City 605 709 -104 -14.67 1.73
8 Tata Tigor / EV 488 859 -371 -43.19 1.39
9 Toyota Camry 222 130 92 70.77 0.63
10 Skoda Octavia 94 0 94 - 0.27
- Total 35,039 24,154 10,885 45.06 100.00

இது கடந்த அக்டோபரை காட்டிலும் 9.29% குறைவாக இருந்த போதிலும், 2024 நவம்பரை காட்டிலும் 52.71% வளர்ச்சி ஆகும். ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) 1,120 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்து விர்டுஸ் காருக்கு அடுத்த இடத்தில் உள்ளது. 2024 நவம்பர் மாதத்தை விடவும் கடந்த நவம்பரில் குறைவாக விற்பனையான செடான் கார்களில் ஸ்லாவியாவும் ஒன்றாகும். 2024 நவம்பரில் 1,131 ஸ்லாவியா கார்களை ஸ்கோடா விற்பனை செய்திருந்தது.

அப்படியென்றால், 2025 அக்டோபரை மாதத்தை விட எந்த அளவிற்கு இதன் விற்பனை குறைந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். 2025 அக்டோபரில் 1,648 ஸ்லாவியா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) 709 யூனிட்களுடன் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதன் விற்பனை ஸ்லாவியாவை விட மோசமாக உள்ளது. 2024 நவம்பரை விட 41.55% மற்றும் 2025 அக்டோபரை விட 13.96% சரிவுடன், வெர்னா கார்கள் தேவையின் தொடர்ச்சியான பலவீனத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

No Sedan Sales Nov-25 Oct-25 Diff Growth % MoM % Share Oct 25
1 Maruti Dzire 21,082 20,791 291 1.40 55.87
2 Hyundai Aura 5,731 5,815 -84 -1.44 15.63
3 Honda Amaze 2,763 3,630 -867 -23.88 9.75
4 VW Virtus 2,225 2,453 -228 -9.29 6.59
5 Skoda Slavia 1,120 1,648 -528 -32.04 4.43
6 Hyundai Verna 709 824 -115 -13.96 2.21
7 Honda City 605 578 27 4.67 1.55
8 Tata Tigor / EV 488 1,196 -708 -59.20 3.21
9 Toyota Camry 222 276 -54 -19.57 0.74
10 Skoda Octavia 94 2 92 4600.00 0.01
- Total 35,039 37,213 -2,174 -5.84 100.00

பிரீமியம் செடான் கார்கள் பிரிவில், ஹோண்டா சிட்டி (Honda City) விற்பனை கடந்த மாதத்தில் 605 யூனிட்களாக பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பரை விட 14.67% சரிந்தாலும், 2025 அக்டோபரை விட 4.67% சிறிய அதிகரிப்பாகும். டொயோட்டா கேம்ரி 222 யூனிட்கள் விற்கப்பட்டு, 2024 நவம்பரை விட 70.77% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அக்டோபரில் மிகக் குறைந்த விற்பனைக்குப் பிறகு, ஸ்கோடா ஆக்டேவியா கடந்த நவம்பர் மாதத்தில் 94 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டுமொத்தமாக, சிறிய மற்றும் மலிவு விலையிலான கார்களுக்கான அதிக தேவையால், 2025 நவம்பர் மாதத்தில் செடான் கார்கள் விற்பனை 2024 நவம்பரை விட அதிகரித்துள்ளது. இருப்பினும், 2025 அக்டோபர் மாதத்தை காட்டிலும் சரிவு என்பது, எஸ்யூவி (SUV) கார்களுக்கான வாடிக்கையாளர்களின் விருப்பம் தொடர்வதால், செடான் கார்கள் விற்பனை மேலும் வேகமெடுப்பதற்குப் பதிலாக மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்புவதைக் காட்டுகிறது. ஆனாலும், டிசையர் காரின் சிறப்பான விற்பனை, மதிப்புமிக்க செடான் கார்களுக்கு இப்போதும் முக்கியத்துவம் உள்ளது என்பதைக் காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, December 22, 2025, 5:00 [IST]
English summary
Maruti suzuki dzire as a most selling sedan car in india 2025 november sales report
மேலும்... #sedan car #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+