லிட்டருக்கு 25கிமீ மைலேஜ் தரும் மாருதி காரை வாங்கவே எல்லாரும் விரும்புறாங்க! ஹூண்டாய் எல்லாம் எங்கேயோ இருக்கு

இந்தியா உள்பட உலகம் முழுக்கவே எஸ்யூவி கார்களை காட்டிலும் செடான் ரக கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை சமீப காலத்தில் வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவில் தற்போதைக்கு குறைந்த விலையில் வெறும் 10 செடான் ரக கார் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், அவற்றின் விற்பனை எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் கணிசமாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2025 ஜனவரி மாதத்திலும் இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை குறைந்துள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம், வாங்க.

இந்தியாவில் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் மொத்தம் 32 ஆயிரத்து 332 செடான் ரக கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2024 ஜனவரி மாதத்தில் இதனை காட்டிலும் 1,519 கார்கள் அதிகமாக 33 ஆயிரத்து 851 செடான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

dzire most selling sedan car

கடந்த ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட செடான் காராக வழக்கம்போல் முதலிடத்தை மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire) பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டிசைர் கார்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 383 ஆகும். ஆனால், 2024 ஜனவரியில் 16 ஆயிரத்து 733 டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்த்தால், டிசைர் கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 1,350 யூனிட்கள் குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனையான மொத்த செடான் கார்களில் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையில் டிசைர் கார்கள் அடங்குகின்றன. அதாவது, இந்தியாவில் செடான் ரக காரை வாங்கும் கஸ்டமர்களில் 2இல் ஒருவர் நிச்சயமாக டிசைர் காரை வாங்குகின்றனர். மீதி ஒருவர் மட்டுமே மற்ற பிராண்ட்களின் செடான் கார்களுள் ஒன்றை வாங்குகிறார்.

dzire most selling sedan car

டிசைருக்கு அடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட செடான் காராக 2வது இடத்தில் ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) உள்ளது. 5,388 அவ்ரா கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே கடந்த ஆண்டு ஜனவரியில் 5 ஆயிரத்து 516 அவ்ரா கார்கள் விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில், அவ்ரா கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 128 யூனிட்கள் குறைந்துள்ளது.

இதற்கடுத்து 3வது இடத்தில் ஹோண்டா அமேஸ் 3,591 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஜனவரியில் 3 ஆயிரம் அமேஸ் கார்கள் கூட விற்பனை செய்யப்படவில்லை. 4வது மற்றும் 5வது இடங்களில் ஒரே மாதிரியான சேசிஸில் உருவாக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,795 மற்றும் 1,510 ஆகும்.

dzire most selling sedan car

இவற்றிற்கு அடுத்து, 6வது மற்றும் 7வது இடங்களில் உள்ள டாடா டிகோர் மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்களின் கடந்த ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,484 மற்றும் 1,477 ஆகும். 8வது மற்றும் 9வது இடங்களில் மாருதி சுஸுகியின் விலைமிக்க செடான் காரான சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி செடான் கார்கள் முறையே 768 மற்றும் 739 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன. இந்த லிஸ்ட்டில் கடைசி 10வது இடத்தில் உள்ள டொயோட்டா காம்ரி கடந்த மாதத்தில் 197 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையில் ஸ்கோடா சூப்பர்ப் செடான் காரும் விற்பனையில் இருந்தது. அது கடந்த மாதத்தில் 1 யூனிட் கூட விற்பனை செய்யப்படவில்லை. இவ்வாறு, நாட்டில் செடான் ரக கார்களின் விற்பனை மெல்ல மெல்ல குறைந்துவரும் போதிலும் மாருதி சுஸுகி டிசைர் காரின் விற்பனை மட்டும் தற்போதுவரையில் அதிகமாகவே இருந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, February 23, 2025, 18:37 [IST]
English summary
Maruti suzuki dzire as usual most selling sedan car of india in january 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X