டிசையர் கார் ராணுவ கேன்டீன்ல இவ்ளோ கம்மி விலையில கிடைக்குதா! நமக்கும், அவங்களுக்கும் எவ்ளோ விலை வித்தியாசம்?

இந்தியர்களின் ஆல்-டைம் ஃபேவரிட் கார் மாடல்களில் ஒன்றாக மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) இருக்கின்றது. கால் டாக்சி துறை மற்றும் தனி நபர் பயன்பாடு என அனைத்திலும் மிக சிறப்பான வரவேற்பு இந்த கார் மாடலுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கார் மாடலுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக அதனை புதிய தலைமுறையாக தயார் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, மாருதி சுஸுகி. சென்ற ஆண்டிலேயே இதன் அறிமுகம் அரங்கேறியது. இதுவே தற்போது நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

பழைய வெர்ஷனைக் காட்டிலும் அதிக சிறப்புகளைத் தாங்கிய ஓர் கார் மாடலாகவே புதிய டிசையர் உள்ளது. குறிப்பாக, பாதுகாப்பு தருவதில் தலை சிறந்த கார் மாடலாக அது விளங்குகின்றது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் பாதுகாப்பு தரும் விஷயத்தில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் ரேட்டிங்கை அது பெற்றிருக்கின்றது. குளோபல் என்சிஏபி இடமிருந்தே இத்தகைய பாதுகாப்பு ரேட்டிங்கை அது பெற்றிருக்கின்றது.

Maruti dzire csd price vs ex-showroom price

இவ்வளவு பாதுகாப்பான காரே இப்போது ராணவ வீரர்களுக்கான கேன்டீனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த பதிவில் மாருதி சுஸுகி டியைசர் கார் மாடலின் ராணுவ கேன்டீன் விலையையும், சாதாரண பொதுமக்களுக்கு விற்பனைச் செய்யப்படும் விலையையும் ஒப்பீடு செய்த தகவலையே பார்க்க இருக்கின்றோம். வாங்க இதுபற்றிய விரிவான பதிவிற்குள் போகலாம்.

ராணுவ கேன்டீனில் மாருதி சுஸுகி டிசையரின் என்னென்ன வேரியண்ட்டுகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன?.. எல்எக்ஸ்ஐ (LXI) மேனுவல், விஎக்ஸ்ஐ (VXI) மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக், இசட்எக்ஸ்ஐ (ZXI) மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக், இசட்எக்ஸ்ஐ பிளஸ் (ZXI Plus) மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய தேர்வுகளே விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதுதவிர, சிஎன்ஜி ஆப்ஷன்களிலும் டிசையர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ் வேரியண்டுகளில் மட்டுமே சிஎன்ஜி விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Maruti dzire front view

ராணுவ கேன்டீனில் மாருதி சுஸுகி டிசையர் கார் மாடலின் ஆரம்ப விலை என்ன? 6 லட்சத்து 02 ஆயிரத்து 923 ரூபாய் என்கிற இந்த ஆரம்ப விலையிலேயே புதிய டிசையர் விற்னைக்குக் கிடைக்கின்றது. இது கேன்டீனில் விற்பனைக்குக் கிடைக்கும் டிசையரின் ஆரம்ப வேரியண்டின் விலை மட்டுமே ஆகும்.

அதிகபட்ச விலையாக ராணுவ கேன்டீனில் ரூ. 8.56 லட்சம் உள்ளது. இது பெட்ரோல் ஆப்ஷன்களின் விலை ஆகும். சிஎன்ஜி ஆப்ஷன் ரூ. 7.77 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலை ரூ. 8.74 லட்சம் ஆகும்.

Maruti dzire rear

நமக்கும், ராணுவ கேன்டீன் மக்களுக்கும் என்ன விலை வித்தியாசத்தில் இந்த கார் விற்பனைச் செய்யப்படுகின்றது? சாதாரண பொதுமக்கள் மாருதி சுஸுகி டிசையர் காரை வாங்க வேண்டும் எனில் எக்ஸ்-ஷோரூமிலேயே ரூ. 6 லட்சத்து 83 ஆயிரத்து 999 வரை செலவழிக்க வேண்டி இருக்கின்றது.

இதைவிட ரூ. 81,076 கம்மியான விலையிலேயே ராணுவ கேன்டீனில் புதிய டிசையர் விற்கப்படுகின்றது. வேரியண்டைப் பொருத்து இந்த விலை வித்தியாசம் இன்னும் அதிகமானதாக மாறுபடும் என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், கேன்டீனில் இந்த காரை வாங்குகையில் ரூ. 1.14 லட்சம் வரை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும்.

விலை வித்தியாசம் பட்டியலில்:

Maruti
Dzire CSD Price List
Variant Powertrain CSD Price
LXI 1.2L Petrol MT ₹6,02,923
VXI 1.2L Petrol MT ₹6,91,601

ZXI

1.2L Petrol MT ₹7,89,451
ZXI Plus 1.2L Petrol MT ₹8,56,498
VXI 1.2L Petrol AT ₹7,36,724
ZXI 1.2L Petrol AT NA
ZXI Plus 1.2L Petrol AT NA
VXI 1.2L CNG MT ₹7,77,733
ZXI 1.2L CNG MT ₹8,74,684

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி டிசையர் கார் மாடலைப் போலவே இன்னும் பல வாகனங்கள் ராணுவ கேன்டீனில் மாபெரும் விலை வித்தியாசத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆகையால், ராணுவ வீரர்கள் வீட்டு உபயோகப் பொருட்களைப் போலவே கார்களையும் மலிவான விலையில் வாங்கிக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 24, 2025, 15:07 [IST]
English summary
Maruti suzuki dzire csd price comparison with ex showroom prices more details
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X