1.3 லட்சம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க! விலையும் கம்மி, மைலேஜூம் நல்லா தருது!
இந்தியாவின் செடான் கார் சந்தையில் மாரூதி சுஸுகி டிசையர் கார் நீண்ட காலமாக முன்னணி வகித்து வருகிறது. 2024 ஏப்ரல் முதல் 2025 ஜனவரி வரை 1,34,867 புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்தது. 2025 நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் 1,30,000 க்கும் மேற்பட்ட கார்கள் விற்பனையானது அதன் பிரபலத்தை எடுத்துக்காட்டுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாரு்ஙகள்.
மாருதி டிசையர் காரின் வெளிப்புறம் பெரிய முன்பக்க கிரில் மற்றும் ஸ்டைலான எல்இடி டிஆர்எல்ஸைக் கொண்டுள்ளது. இதில் எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் புதிய 15 இன்ச் டுயல் டோன் அலாய் வீல்களும் உள்ளன. இந்த வடிவமைப்பு கூறுகள் அதன் நவீன மற்றும் ஸ்டைலான தோற்றத்திற்கு பங்களிக்கின்றன.

இந்த காரின் உள்ளே 9 இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோலை கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இது சிங்கிள் பேன் சன்ரூஃப் கொண்ட இந்தியாவின் முதல் சப்-காம்பேக்ட் செடான் கார் ஆகும். இந்த அம்சங்கள் டிரைவிங் அனுபவத்தை கணிசமாக மேம்படுத்துகின்றன.
பாதுகாப்பு அம்சங்கள் மாரூதி டிசையர் காரில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. கார் மோதல் சோதனைகளில் குடும்ப பாதுகாப்புக்காக குளோபல் என்சிஏபி முழு 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. கூடுதல் பாதுகாப்புக்காக காரில் ஆறு ஏர்பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல் ஆகிய அம்சங்கள் உள்ளது.

டிசையர் காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இந்த இன்ஜின் 81.58bhp பவர் மற்றும் 111.7Nm டார்க் திறனை வழங்குகிறது. இது சாஃப்டான ஓட்டுநர் அனுபவத்தை உறுதி செய்கிறது. இதனால் பயணிகளுக்கு நல்ல பயண அனுபவம் கிடைக்கிறது
மைலேஜ் டிசையர் காரின் மற்றொரு வலுவான அம்சமாகும். இது மேனுவல் கியர் பாக்ஸ மூலம் 24.79 கிமீ/லி மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் 25.71 கிமீ/லி வரை வியத்தகு மைலேஜை வழங்குகிறது. இதனால் இந்த காரை பயன்படுத்துபவர்களுக்கு எரிபொருள் செலவு குறைவு.

இந்தியாவில், மாருதி டிசயரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 6.79 லட்சத்தில் தொடங்கி டாப் மாடலுக்கு ரூ. 10.14 லட்சம் வரை உள்ளது. இந்த விலை நிர்ணயம் பணத்திற்கான சிறந்த காரை தேடும் பல வாடிக்கையாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான ஆப்ஷனாக மாறுகிறது. இந்த அம்சங்கள ்தான் இந்த காரின் அதிக விற்பனைக்கு முக்கியமான காரணம்
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்டைல், செயல்திறன் மற்றும் மலிவு விலையின் கலவையால் மாருதி சுஸுகி டிசயர் இந்திய வாடிக்கையாளர்களிடையே பிரபலமான தேர்வாக தொடர்ந்து இருந்து வருகிறது. இது மட்டுமல்லாமல் மைலேஜ் மற்றும் இந்த காரின் உள்ள பிராக்டிக்கல் அம்சங்களும் இந்த காரின் விற்பனையை அதிகரிக்க பெரிய காரணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









