34 கிமீ மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் காரின் புது விலை இவ்ளோதானா! அப்படியே தரமட்டத்துக்கு குறைய போகுது!
இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள செடான் ரக காராக மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) திகழ்கிறது. இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 16,509 டிசையர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 10,627 ஆக மட்டுமே இருந்தது.

இதன் மூலம் மாருதி சுஸுகி டிசையர் கார் விற்பனையில் 55 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars Sold In August 2025), மாருதி சுஸுகி டிசையர் 2வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.84 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.19 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆனால் ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பால், வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு பிறகு, மாருதி சுஸுகி டிசையர் காரின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனேகமாக மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் புதிய விலை வெறும் 6.25 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் புதிய விலை வெறும் 9.32 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
இவை அனைத்துமே எதிர்பார்க்கப்படும் புதிய எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். டிசையர் காரின் வேரியண்ட் வாரியான புதிய விலை பட்டியலை மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. எனவே அதுவரை நாம் காத்திருப்பது அவசியம். இருப்பினும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு செடான் ரக காரை வாங்க தீர்மானித்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி டிசையர் நல்ல ஆப்ஷன்தான்.
மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. அத்துடன் இது குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனையில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) வாங்கிய கார் ஆகும். எனவே பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க கூடிய வாடிக்கையாளர்களும், மாருதி சுஸுகி டிசையர் காரை பரிசீலிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura), டாடா டிகோர் (Tata Tigor) மற்றும் ஹோண்டா அமேஸ் (Honda Amaze) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி டிசையர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இந்தியாவில் மாருதி சுஸுகி டிசையர் அளவிற்கு, வேறு எந்த செடான் காரும் விற்பளையாகவதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








