கூட்டத்த கட்டுப்படுத்த முடியல! 34 கிமீ மைலேஜ் காரை இந்த ரேட்ல விக்கறாங்களா! 5 ஸ்டார் ரேட்டிங் வேற வாங்கீருக்கு

2025ம் ஆண்டின் முதல் 6 மாதங்கள் கண்ணை மூடி திறப்பதற்குள் கடந்து விட்டதை போல் இருக்கிறது. தற்போது நாம் 2025ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில் நடப்பு 2025ம் ஆண்டின் முதல் பாதியில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியல் (Top 10 Cars H1 2025) வெளியாகியுள்ளது.

இது நடப்பு 2025ம் ஆண்டின் ஜனவரி-ஜூன் வரையிலான 6 மாதங்களுக்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ஆகும். இந்த பட்டியலில் வழக்கம் போல எஸ்யூவி (SUV Cars) மற்றும் ஹேட்ச்பேக் ரக கார்கள்தான் (Hatchback Cars) ஆதிக்கம் செலுத்தியுள்ளன. மொத்தம் 6 எஸ்யூவி ரக கார்களுக்கு இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.

Maruti Suzuki Dzire Airbags

அவை ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx), டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) ஆகியவை ஆகும்.

அதே நேரத்தில் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த 2 கார்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன. அவை மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) ஆகியவை ஆகும். மறுபக்கம் எம்பிவி (MPV) மற்றும் செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த தலா ஒரு கார்களுக்கும் இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.

Maruti Suzuki Dzire

இதில், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) எம்பிவி ரகத்தை சேர்ந்தது ஆகும். அதே நேரத்தில் செடான் ரகத்தை சேர்ந்த கார் மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகும். இதில், ஆச்சரியம் அளிக்க கூடிய கார் மாருதி சுஸுகி டிசையர்தான். ஏனெனில் இந்தியாவில் செடான் ரக கார்களின் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து கொண்டே வருகிறது.

ஆனால் விதிவிலக்காக மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது. நடப்பு 2025ம் ஆண்டின் முதல் பாதியில் ஒட்டுமொத்தமாக 96,101 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கடந்த 2024ம் ஆண்டின் முதல் பாதியில் 93,811 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது 2,290 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலமாக நடப்பு 2025ம் ஆண்டின் முதல் பாதியில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகி டிசையர் கார் 3வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் இருப்பது முறையே மாருதி சுஸுகி வேகன் ஆர் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகியவை ஆகும். 1,01,424 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் மாருதி சுஸுகி வேகன் ஆர் முதல் இடத்தையும், 1,00,560 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் ஹூண்டாய் க்ரெட்டா 2வது இடத்தையும் பிடித்துள்ளன.

அதாவது சிறிய வித்தியாசத்தில்தான் மாருதி சுஸுகி டிசையர் 3வது இடத்தில் உள்ளது. விற்பனையில் இதே உத்வேகம் தொடர்ந்தால், நடப்பு 2025ம் ஆண்டில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி டிசையர் பெறுவதற்கான வாய்ப்புகள் கூட இருக்கின்றன.

இது நடக்குமா? என்ற கேள்விக்கான பதில், 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் நமக்கு தெரிய வரும். மாருதி சுஸுகி டிசையர் காரை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவதற்கு 3 முக்கியமான காரணங்கள் உள்ளன. அவை மைலேஜ் (Mileage), பாதுகாப்பு (Safety) மற்றும் சரியான விலை நிர்ணயம் ஆகியவை ஆகும்.

டிசையர் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும் மாருதி சுஸுகி டிசையர் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.84 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 10.19 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் டிசையர் காரின் புதிய தலைமுறை மாடலை கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதை தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் உறுதி செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 19, 2025, 17:14 [IST]
English summary
Maruti suzuki dzire sales report h1 2025 2 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+