எமனுக்கே சவால் விடும் மாருதி காருக்கு இந்த நிலைமையா! விஷயத்தை கேட்டதும் டாடாலாம் சந்தோஷமாயிருக்கும்!
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் கார்கள் பாதுகாப்பு தரம் இல்லாதவை என்ற விமர்சனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த அவப்பெயரை மாற்றிய பெருமை மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) காருக்கு சேரும். ஆம், குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) மாருதி சுஸுகி டிசையர் கார் வாங்கியுள்ளது. இந்த பெருமையை தனதாக்கிய மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் டிசையர்தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இருப்பினும் கூட கடந்த ஜனவரி மாதம் மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாருதி சுஸுகி டிசையர் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.

இந்த ரிப்போர்ட்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 15,383 டிசையர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதமோ 16,773 ஆக இருந்தது.
இது 8 சதவீத வீழ்ச்சி ஆகும். அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் (Top 10 Cars) பட்டியலில் மாருதி சுஸுகி டிசையர் காருக்கு 9வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த சரிவில் இருந்து மாருதி சுஸுகி டிசையர் விரைவிலேயே மீண்டு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இது பாதுகாப்பான கார் என்பதுடன், நடுத்தர வர்க்க மக்கள் வாங்கும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் சிறப்பான மைலேஜையும் (Mileage) தருகிறது. மேலும் ஏராளமான வசதிகளும் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன. எனவேதான் மாருதி சுஸுகி டிசையர் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என நாங்கள் கருதுகிறோம்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி டிசையர் கார், 6.84-10.19 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் (Ex-showroom Price) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன.
இந்த காரின் பல்வேறு வேரியண்ட்களிலேயே, அதிக மைலேஜ் வழங்க கூடியவையாக சிஎன்ஜி வேரியண்ட்கள் இருக்கின்றன. அத்துடன் மாருதி சுஸுகி டிசையர் காரில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் உடன் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி டிசையர் சரிவு தற்காலிகமானது என நாங்கள் கருதுகிறோம். இந்திய சந்தையில் ஹோண்டா அமேஸ் (Honda Amaze), ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) மற்றும் டாடா டிகோர் (Tata Tigor) போன்ற கார்களுடன், மாருதி சுஸுகி டிசையர் போட்டியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








