34 கிமீ மைலேஜ்! ஆனா விலை இவ்ளோதானா! ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்த இந்திய தயாரிப்பு!

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் செடான் ரகத்தை சேர்ந்த கார்களின் விற்பனை குறைந்து கொண்டே வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருக்கும் கார், செடான் ரகத்தை சேர்ந்தது என்றால் உங்கள் நம்ப முடிகிறதா?

ஆம், உண்மைதான். மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) கார்தான், இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியல் (Top 10 Cars July 2025) தற்போது வெளியாகியுள்ளது.

Maruti Suzuki Dzire Side Design

இதில், மாருதி சுஸுகி டிசையர் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 11,647 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் 20,895 ஆக உயர்ந்துள்ளது.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 9,248 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனவே மாருதி சுஸுகி டிசையர் கார் விற்பனையில் 79 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

Maruti Suzuki Dzire

இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில், விற்பனையில் மிகவும் அதிகமான வளர்ச்சி சதவீதத்தை கொண்டுள்ள கார் என்ற பெருமையையும் மாருதி சுஸுகி டிசையர் சேர்த்தே பெற்றுள்ளது.

அத்துடன் இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த ஒரே கார் என்ற பெருமையையும் மாருதி சுஸுகி டிசையர் பெற்றுள்ளது. முதல் இடத்தில் உள்ள மாருதி சுஸுகி டிசையர் கார் 20,895 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ள நிலையில், 2வது இடத்தில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா கார், 16,898 என்ற விற்பனை எண்ணிக்கையை மட்டுமே கொண்டுள்ளது.

இது குறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் செடான் ரக கார்கள் விற்பனையில் தடுமாறி கொண்டுள்ள நிலையில், மாருதி சுஸுகி டிசையர் கார் மட்டும், அதற்கு அப்படியே நேர் எதிராக விற்பனையில் சாதனைகளை படைத்து வருகிறது.

மாருதி சுஸுகி டிசையர் கார் வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதுதான் இதற்கு காரணம். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.84 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 10.19 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இது ஓரளவிற்கு விலை குறைந்த காராக இருந்தாலும் கூட, எலெக்ட்ரிக் சன்ரூஃப், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

அத்துடன் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், சுஸுகி கனெக்ட் தொழில்நுட்பம் மூலமாக 40க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகள், 360 வியூ ஹெச்டி கேமரா உடன் ஸ்மார்ட் ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எல்இடி ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட் உள்ளிட்ட அம்சங்களையும் மாருதி சுஸுகி டிசையர் கொண்டுள்ளது.

மேலும் குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்புகளின் மோதல் சோதனைகளில் மாருதி சுஸுகி டிசையர், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது. எனவே மாருதி சுஸுகி டிசையர் கார், பாதுகாப்பிலும் தலை சிறந்து விளங்குகிறது.

அத்துடன் மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது கவனிக்கத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வசதிகள், பாதுகாப்பு மற்றும் மைலேஜ் என அனைத்து அம்சங்களிலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மாருதி சுஸுகி டிசையர் பூர்த்தி செய்கிறது. அத்துடன் இந்த காருக்கு சரியான விலை நிர்ணயமும் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்துதான், மாருதி சுஸுகி டிசையர் காரை மிகவும் வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றியுள்ளன.

மாருதி சுஸுகி டிசையர் காருக்கு இந்தியாவில் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் டிசையர் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் இருந்து சர்வதேச சந்தைகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக டிசையர் திகழ்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 7, 2025, 13:48 [IST]
English summary
Maruti suzuki dzire sales report july 2025 79 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+