34 கிமீ மைலேஜ் தர்ற 5 ஸ்டார் ரேட்டிங் காரை தரமட்ட ரேட்ல விக்கறாங்க! ஒத்த ஆளா எதிராளிகளை துவம்சம் பண்ணுது!
இந்திய சாலைகளை ஒரு காலத்தில் செடான் ரக கார்கள்தான் (Sedan Cars) ஆட்சி செய்து கொண்டிருந்தன. ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador) மற்றும் பிரீமியர் பத்மினி (Premier Padmini) போன்றவை எல்லாம் செடான் ரகத்தை சேர்ந்த கார்கள்தான். ஆனால் தற்போது காலம் மாறி விட்டது.
செடான் ரக கார்களின் இடத்தை, எஸ்யூவி ரக கார்கள் (SUV Cars) பிடித்து விட்டன. தற்போது எஸ்யூவி ரக கார்கள், விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றன. மறுபக்கம் செடான் ரக கார்களின் விற்பனை 'டல்' அடிக்கிறது. ஆனால் ஒரே ஒரு செடான் ரக கார் மட்டும், எஸ்யூவி ரக கார்களுக்கே சவால் அளிக்கும் வகையில், விற்பனையில் சாதனைகளை படைத்து கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) காரை பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம். ஒவ்வொரு மாதமும், மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை எண்ணிக்கை, மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதமும், மாருதி சுஸுகி டிசையர் கார், சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம், 15,484 டிசையர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம், 13,421 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இது 15 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம், மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars Sold In June 2025), மாருதி சுஸுகி டிசையர் கார், 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) ஆகும்.
இந்த பட்டியலில் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த 6 கார்கள் இடம்பிடித்துள்ளன. அவை ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio), டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா பன்ச் (Tata Punch) மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) ஆகியவை ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த 2 கார்களுக்கு (Hatchback Cars), இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. அவை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) மற்றும் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) ஆகியவை ஆகும். மறுபக்கம் எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த ஒரு காருக்கு இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. அது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) ஆகும்.
எஞ்சிய ஒரு இடத்தை செடான் ரக காரான மாருதி சுஸுகி டிசையர் பிடித்துள்ளது. இதன் மூலம் இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு செடான் ரக கார் என்ற பெருமையையும், மாருதி சுஸுகி டிசையர் தட்டி சென்றுள்ளது. அதுவும் ஏராளமான எஸ்யூவி ரக கார்களை பின்னுக்கு தள்ளி, இந்த பட்டியலில் 2வது இடத்தை, மாருதி சுஸுகி டிசையர் தன்வசமாக்கியுள்ளது.
இதற்கு முதல் காரணம் மாருதி சுஸுகி டிசையர் காரின் விலைதான். உண்மையில் மாருதி சுஸுகி நிறுவனம் டிசையர் காருக்கு சரியான விலையை நிர்ணயம் செய்துள்ளது. மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப விலை வெறும் 6.84 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 10.19 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். மாருதி சுஸுகி டிசையர் காரின் வெற்றிக்கு, பாதுகாப்பு மற்றொரு முக்கியமான காரணமாக உள்ளது. குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) பெற்று, மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு பெருமை தேடி தந்தது டிசையர்.
அத்துடன் நிற்காமல், பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளிலும், மாருதி சுஸுகி டிசையர் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றது. அத்துடன் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மைலேஜ் (Mileage) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை ஏன் பிரம்மாண்டமானதாக உள்ளது? என்பது உங்களுக்கு தற்போது புரிந்திருக்கும். சரியான விலை நிர்ணயம், பாதுகாப்பு மற்றும் மைலேஜ் ஆகிய அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்துதான், டிசையர் காரை இந்தியாவின் மிக வெற்றிகரமான செடான் ரக கார்களில் ஒன்றாக மாற்றியுள்ளன.
மாருதி சுஸுகி டிசையர் கார் கடந்த 2008ம் ஆண்டு மார்ச் மாதம்தான் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்து கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் மட்டும், 30 லட்சம் டிசையர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்து விட்டது.
இந்த எண்ணிக்கை தற்போது சுமார் 31 லட்சமாக உயர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து சிறப்பாக உள்ளதால், வரும் காலங்களில், அது விற்பனையில் இன்னும் ஏராளமான சாதனைகளை படைக்கும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








