34 கிமீ மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் காரை தரமட்ட ரேட்ல விக்கறாங்க! பைக் மாதிரி வித்துகிட்டு இருக்கு!

இந்திய சாலைகளை செடான் ரக கார்கள் (Sedan Cars) ஆக்கிரமித்திருந்த ஒரு காலம் இருந்தது. ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador), பிரீமியர் பத்மினி (Premier Padmini) என இந்திய சாலைகளை ஆட்சி செய்து கொண்டிருந்த செடான் ரக கார்களின் பட்டியலை எடுத்தால், அது நீண்டு கொண்டே செல்லும்.

ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பொன்மொழி கார்களுக்கும் பொருந்தும். இந்திய சந்தையில் வீச தொடங்கிய எஸ்யூவி (SUV) புயலில் சிக்கி, செடான் ரக கார்கள் சின்னாபின்னமாகி விட்டன. தற்போது புதிய கார் வாங்க செல்லும் பலரின் விருப்பம், எஸ்யூவி ரக கார்களாகதான் உள்ளது.

Maruti Suzuki Dzire Front View

வாடிக்கையாளர்களின் விருப்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால், பாதிக்கப்படாமல் இருக்கும் ஒரே ஒரு செடான் ரக கார் என்றால், அது நிச்சயமாக மாருதி சுஸுகி டிசையர்தான் (Maruti Suzuki Dzire). இன்னும் சொல்லப்போனால் ஒரு சில மாதங்கள் விற்பனையில் எஸ்யூவி ரக கார்களையே மாருதி சுஸுகி டிசையர் ஓரங்கட்டி விடுகிறது.

இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் நல்ல உதாரணம். இந்த மாதத்தில் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையான கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி டிசையர் தட்டி சென்றுள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் அதிகமாக விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியல் (Top 10 Cars May 2025) தற்போது வெளியாகியுள்ளது.

Maruti Suzuki Dzire

இதில், மாருதி சுஸுகி டிசையர் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்திய சந்தையில் செடான் ரக கார்கள் விற்பனையாவதே குதிரை கொம்பாக இருக்கும் நிலையில், மாருதி சுஸுகி டிசையர் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து, அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவின் செடான் கார் செக்மெண்ட்டை மாருதி சுஸுகி டிசையர் பாகுபலி போல் தனி ஆளாக தாங்கி பிடித்து கொண்டிருப்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். மாருதி சுஸுகி டிசையர் கார் நம்பர்-1 இடத்தை பிடித்திருப்பதுடன் மட்டுமல்லாது, விற்பனையில் பிரம்மாண்டமான வளர்ச்சியையும் பதிவு செய்து அசத்தியுள்ளது.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 16,061 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் அந்த எண்ணிக்கை 18,084 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 13 சதவீத வளர்ச்சியுடன், டாப் 10 கார்களின் பட்டியலில் முதல் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது மாருதி சுஸுகி டிசையர்.

இதற்கு டிசையர் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் என்பது ஒரு காரணம் என்றால், விலை (Price) மற்றும் மைலேஜ் (Mileage) ஆகியவை மற்ற 2 முக்கியமான காரணங்கள் ஆகும். இந்த காரின் ஆரம்ப விலை 6.84 லட்ச ரூபாய் மட்டுமே. அதேசமயம் இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குறைவான விலையில் அதிக மைலேஜ் தரக்கூடிய ஒரு செடான் ரக காரை வாங்க வேண்டும் என்றால், மாருதி சுஸுகி டிசையர் நல்ல ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருப்பது, மாருதி சுஸுகி டிசையர் காரின் பலம்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 5, 2025, 23:38 [IST]
English summary
Maruti suzuki dzire sales report may 2025 13 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+