மறுபிறவி எடுத்து வந்த அம்பாஸிடர்! பைக் மாதிரி மைலேஜ் குடுக்குது! ஆனா விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் செடான் ரக கார்கள்தான் (Sedan Cars), வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தன. இதற்கு ஹிந்துஸ்தான் அம்பாஸிடரை (Hindustan Ambassador) ஒரு உதாரணமாக கூற முடியும். ஆனால் தற்போதெல்லாம் இந்தியாவில் செடான் ரக கார்களின் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது.

இருப்பினும் ஒரே ஒரு செடான் ரக கார் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கிறது. அது மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகும். இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களின் (SUV Cars) ஆதிக்கம் அதிகரித்த காரணத்தால், செடான் ரக கார்கள் செல்வாக்கை இழந்து விட்டன.

Maruti Suzuki Dzire Airbags

ஆனால் விதிவிலக்காக மாருதி சுஸுகி டிசையர் மட்டும் ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திலும் மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருந்துள்ளது.

மாருதி சுஸுகி டிசையர் காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 21,082 டிசையர் கார்களை விற்பனை செய்துள்ளது.

Maruti Suzuki Dzire

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெறும் 11,779 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 9,303 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் மாருதி சுஸுகி டிசையர் கார் விற்பனையில் 79 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars November 2025), மாருதி சுஸுகி டிசையர் கார், 2வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது டாடா நெக்ஸான் (Tata Nexon) ஆகும். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு செடான் ரக கார், மாருதி சுஸுகி டிசையர் மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். குறைவான விலை மற்றும் நிறைவான மைலேஜ் ஆகிய 2 காரணங்கள்தான், மாருதி சுஸுகி டிசையரின் பிரம்மாண்டமான வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணங்களாக உள்ளன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.26 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 9.31 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி டிசையர் காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.79 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. மறுபக்கம் இந்த காரின் பெட்ரோல்/ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 25.71 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன.

அதே நேரத்தில் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். குறைவான விலை, நிறைவான மைலேஜ் ஆகிய சிறப்பம்சங்கள் உடன், எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளையும் (Features) மாருதி சுஸுகி டிசையர் கொண்டுள்ளது.

மேலும் குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும் மாருதி சுஸுகி டிசையர் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) பெற்று அசத்தியுள்ளது. இது போன்ற காரணங்கள் எல்லாம் ஒருங்கிணைந்துதான், மாருதி சுஸுகி டிசையரை மிகவும் வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றியுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹிந்துஸ்தான் அம்பாஸிடருக்கு பிறகு இந்தியா கண்ட மிகவும் வெற்றிகரமான செடான் ரக கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி டிசையர் உள்ளது. எனவே இதை ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் மறுபிறவி என குறிப்பிடலாம். இந்திய சந்தையில் டாடா டிகோர் (Tata Tigor), ஹோண்டா அமேஸ் (Honda Amaze) மற்றும் ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மாருதி சுஸுகி டிசையர் திகழ்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 10, 2025, 14:37 [IST]
English summary
Maruti suzuki dzire sales report november 2025 79 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+