மறுபிறவி எடுத்த அம்பாஸிடர்! 34 கிமீ மைலேஜ்! விலை வெறும் 6 லட்சம்தானா!
இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது என்பதெல்லாம் பச்சை குழந்தைக்கு கூட தெரியும். ஆனால் விதிவிலக்காக ஒரு செடான் கார் மட்டும் விற்பனையில் கொடி கட்டி பறந்து கொண்டுள்ளது. அது மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகும்.
இந்தியாவில் தற்போதைய நிலையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள ஒரே ஒரு செடான் ரக கார் என்றால், அது மாருதி சுஸுகி டிசையர்தான். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியின் பின் பகுதியில் பார்க்கலாம். அதற்கு முன்னதாக மாருதி சுஸுகி டிசையர் காரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை பார்த்து விடலாம்.

காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 20,791 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 12,698 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 8,093 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாருதி சுஸுகி டிசையர் கார் விற்பனையில் 64 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars October 2025), மாருதி சுஸுகி டிசையர் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் (Tata Nexon) எஸ்யூவி ரக கார் முதல் இடத்தை பிடித்துள்ளது.
அதே நேரத்தில் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனையான செடான் ரக கார் என்றால், அது மாருதி சுஸுகி டிசையர்தான். சரி, மீண்டும் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இந்த காரின் வெற்றிக்கு என்னென்ன காரணங்கள்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப விலை வெறும் 6.26 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.31 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
அதே நேரத்தில் இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்குவதாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறைவான விலை மற்றும் நிறைவான மைலேஜ் ஆகிய 2 அம்சங்கள்தான், மாருதி சுஸுகி டிசையர் காரின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணங்கள்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா டிகோர் மற்றும் ஹூண்டாய் அவ்ரா போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி டிசையர் சிம்ம சொப்பனமாக திகழ்கிறது. ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு செடான் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி டிசையர் நல்ல ஆப்ஷன்.
இந்திய சந்தையில் ஒரு காலத்தில் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார் விற்பனையில் கொடி கட்டி பறந்தது. அது செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அதற்கு பிறகு இந்தியாவில் ஒரு செடான் ரக கார் இந்த அளவிற்கு விற்பனையாகிறது என்றால், அது கண்டிப்பாக மாருதி சுஸுகி டிசையர்தான். எனவே இதை ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரின் மறு பிறவி என்று கூட கூறலாம்.


Click it and Unblock the Notifications








