34 கிமீ மைலேஜ்! ஆனா விலை இவ்ளோதானா! எப்படியாவது இந்த காரை வாங்கீரணும்னு ஷோரூம் வாசலில் தவம் கிடக்கும் மக்கள்!

இந்திய சந்தையில் செடான் ரக கார்களின் (Sedan Cars) விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் ஒரு கார் மட்டும் விதிவிலக்காக விற்பனையில் பல்வேறு சாதனைகளை படைத்து கொண்டுள்ளது. அது மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகும்.

இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் செடான் ரக கார் எது என கேட்டால், மாருதி சுஸுகி டிசையர் என கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். ஒவ்வொரு மாதமும் மாருதி சுஸுகி டிசையர் கார் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

Maruti Suzuki Dzire Side Design

இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதமும், மாருதி சுஸுகி டிசையர் கார், சிறப்பான முறையில் விற்பனையாகியுள்ளது. காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள மாருதி சுஸுகி டிசையர் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.

இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 20,038 டிசையர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம், வெறும் 10,853 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Maruti Suzuki Dzire

அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 9,185 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாருதி சுஸுகி டிசையர் கார் விற்பனையில் 85 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

இந்த சிறப்பான வளர்ச்சியின் காரணமாக, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars September 2025), மாருதி சுஸுகி டிசையர் கார் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் (Tata Nexon) முதல் இடத்தில் உள்ளது.

மாருதி சுஸுகி டிசையர் காரின் இந்த சிறப்பான வளர்ச்சிக்கு நிறைய காரணங்கள் உள்ளன. மிகவும் குறைவான விலை இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.26 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.31 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இது விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய காராகவும் இருக்கிறது.

மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே கவனிக்கத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura), ஹோண்டா அமேஸ் (Honda Amaze) மற்றும் டாடா டிகோர் (Tata Tigor) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி டிசையர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, October 9, 2025, 18:16 [IST]
English summary
Maruti suzuki dzire sales report september 2025 85 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+