34 கிமீ மைலேஜ் காரை அடி மாட்டு விலையில் வித்துட்டு இருக்காங்க! இந்த ரேட்டுக்கு கண்ண மூடிட்டு வாங்கலாம்!

இந்திய சந்தையில் செடான் ரக கார்களின் (Sedan Cars) ஆதிக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு பதிலாக எஸ்யூவி ரக கார்களை (SUV Cars) வாங்குவதற்குதான் இந்திய வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். இருப்பினும் ஒரு செடான் ரக கார் மட்டும் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை தவறாமல் பதிவு செய்து வருகிறது. அது மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகும். நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் மாருதி சுஸுகி டிசையர் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள மாருதி சுஸுகி டிசையர் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 14,694 டிசையர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

Maruti Suzuki Dzire Front View

இதன் மூலம் இந்தியாவில் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனையான செடான் கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி டிசையர் பெற்றுள்ளது. இருப்பினும் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை சற்றே சரிவை சந்தித்துள்ளது.

ஆம், மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15,837 டிசையர் கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14,694 ஆக குறைந்துள்ளது. இது 7 சதவீத வீழ்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Maruti Suzuki Dzire

இருப்பினும் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் (Top 10 Cars) பட்டியலில் மாருதி சுஸுகி டிசையர் 9வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு செடான் கார் மாருதி சுஸுகி டிசையர் மட்டுமே!

மற்ற கார்கள் எல்லாம் எஸ்யூவி, ஹேட்ச்பேக் (Hatchback) மற்றும் எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்தவை ஆகும். இதன் மூலமாக இந்திய சந்தையின் செடான் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி டிசையர் கார் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டிருப்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப விலை வெறும் 6.84 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 10.19 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மாருதி சுஸுகி டிசையர் காரை வாடிக்கையாளர்கள் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதுகின்றனர். இதன் காரணமாகவே மாருதி சுஸுகி டிசையர் கார் விற்பனையில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்பட்டு கொண்டுள்ளது என நாங்கள் கருதுகிறோம்.

கூடுதலாக இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. அத்துடன் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் மாருதி சுஸுகி டிசையர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. எனவே தற்போது சிறிய அளவிலான சரிவை சந்தித்திருந்தாலும் கூட, வரும் மாதங்களில் மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 9, 2025, 23:57 [IST]
English summary
Maruti suzuki dzire sedan sales report february 2025 7 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+