இந்தியாவே எதிர்பார்க்கும் எலெக்ட்ரிக் காரை ஷோரூம்களுக்கு அனுப்ப ஆரம்பிச்சுட்டாங்க! விலை இவ்ளோதான் இருக்குமா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இது, சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2025 ஆட்டோ எக்ஸ்போ வாகன திருவிழாவில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து வரும் மார்ச் மாதத்தில், இந்த கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக இந்தியாவில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஷோரூம்களுக்கு இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் தற்போது வர தொடங்கியுள்ளது.
இந்த வரிசையில் பெங்களூர் நகரில் உள்ள ஒரு மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஷோரூமிற்கு மாருதி சுஸுகி இ விட்டாரா கார் வந்துள்ளது. இது ஒரு பிரீமியம் கார் ஆகும். எனவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலமாக விற்பனை செய்யப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் இ விட்டாரா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கு முன்பாக ஷோரூம்களில் காட்சிக்கு வைப்பதற்காகவே தற்போது இ விட்டாரா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் அனுப்பி வைத்து கொண்டுள்ளது. இது வாடிக்கையாளர்களை கவர்வதற்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் நகரில் உள்ள ஷோரூமிற்கு இ விட்டாரா கார் வந்ததையடுத்து, நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, அதை பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மாருதி சுஸுகி இ விட்டாரா காரை பற்றிய ஏராளமான தகவல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன.

இதன்படி மாருதி சுஸுகி இ விட்டாரா காரில், 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 48.8 kWh மற்றும் 61.1 kWh ஆகியவை ஆகும். அத்துடன் லெவல் 2 அடாஸ், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஸ்போர்ட், ஈக்கோ மற்றும் நார்மல் என 3 டிரைவிங் மோடுகள் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளும் மாருதி சுஸுகி இ விட்டாரா காரில் வழங்கப்பட்டுள்ளன.
இவை எல்லாம் தவிர பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 7 ஏர்பேக்குகள் மற்றும் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் ஆகிய வசதிகளும், மாருதி சுஸுகி இ விட்டாரா காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் இந்த காரின் விலை எவ்வளவு? என்பது மட்டும் தெரியவில்லை.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் விலை எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். சரியான விலை மட்டும் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டால், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக 17 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 22.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இது நாங்கள் எதிர்பார்க்கும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.


Click it and Unblock the Notifications








