இந்த 5 விஷயத்துக்காகவே புதிய இ-விட்டாரா காரை வாங்கலாம்! மாருதி சுஸுகி மறுபடியும் மனதை கவர்ந்துடுச்சு!
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், மாருதி சுஸுகி இ-விட்டாரா (Maruti Suzuki e-Vitara) எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) கார் சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்டது. சுஸுகி ஏற்கெனவே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இ-விட்டாரா எஸ்யூவி கார்களை உலக சந்தைகளில் விற்பனை செய்து வந்தாலும், இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, இந்தியாவில் இந்த காரை அறிமுகம் செய்வதற்கு தொடர்ந்து தாமதித்து வருகிறது.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) போன்ற நிறுவனங்கள் இந்த துறையில் முன்கூட்டியே நுழைந்து சாதகமான நிலையில் உள்ளன. கால தாமதமானாலும், இப்போது மாருதி சுஸுகி இ-விட்டாராவை இந்திய சந்தையில் களமிறக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக 'இவிஎக்ஸ்' (eVX) கான்செப்ட் மாடலாக அறிமுகப்படுத்தப்பட்ட இ விட்டாரா, அதன் அசல் கான்செப்ட் வடிவமைப்பின் முக்கிய கூறுகளையும், கவர்ச்சியையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

எலெக்ட்ரிக் காராக, இ-விட்டாரா ஏராளமான நவீன அம்சங்களுடன் வந்துள்ளது. இந்த அம்சங்கள், எஸ்யூவி காரின் பிரீமியம் தோற்றத்தை மேம்படுத்துவதுடன், ஓட்டுநர் மற்றும் பயணிகளின் வசதியையும் பாதுகாப்பையும் அதிகரிக்கின்றன. மாருதி சுஸுகி இ விட்டாராவில் உள்ள சிறந்த ஐந்து முக்கிய தொழில்நுட்ப அம்சங்களை இனி காண்போம்.
லெவல்-2 அடாஸ் (Level-2 ADAS): மாருதி சுஸுகி இ-விட்டாராவின் மிக முக்கியமான தொழில்நுட்ப அம்சங்களில் ஒன்று, லெவல்-2 ADAS (மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள்) தொகுப்பு ஆகும். அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப்பிங் அசிஸ்ட் என பல மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை இது உள்ளடக்கியுள்ளது. இது ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பையும், சௌகரியமான பயண அனுபவத்தையும் வழங்குகிறது.

360-டிகிரி கேமரா: நவீன கார்களில் வாடிக்கையானதாகி வரும் 360-டிகிரி கேமரா அம்சம், மாருதி சுஸுகி இ-விட்டாராவிலும் வழங்கப்பட்டுள்ளது. இது காரைச் சுற்றியுள்ள பகுதியின் முழுமையான காட்சியை அளிக்கிறது. மேலும், காரின் 'பறவைக் கண்' காட்சியானது, குறைந்த இடவசதியுள்ள இடங்களில் வாகனத்தை நிறுத்துவதற்கும், இயக்குவதற்கும் ஓட்டுநருக்கு மிகவும் உதவியாக உள்ளது.
ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD): ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே அம்சம், முன்பை விட இப்போது அதிக கார்களில் இடம்பெற்றாலும், இன்னும் கார்களில் அடிப்படை அம்சமாக மாறவில்லை. இந்த HUD, ஓட்டுநரின் கண்களுக்கு நேராக விண்ட்ஷீல்டிலோ அல்லது பிரத்யேக கண்ணாடியிலோ வேகம், செல்ல வேண்டிய வழிக்கான திசை போன்ற முக்கியமான தகவல்களைத் திரையிடுகிறது. இதன் மூலம், ஓட்டுநர் சாலையிலிருந்து கண்களை எடுக்க வேண்டியதில்லை. இந்த அம்சம், எஸ்யூவி-யில் உள்ள 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.1 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே ஆகிய இரட்டை டிஜிட்டல் திரைகளுடன் இணைந்து செயல்படுகிறது.

வெண்டிலேட்டட் (Ventilated) & எலெக்ட்ரிக் மூலம் சரிசெய்யக்கூடிய முன் இருக்கைகள்: மாருதி சுஸுகி இ-விட்டாராவில் வெண்டிலேட்டட் வசதியுடன் கூடிய முன் இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்திய சந்தையில் நவீன மாடர்ன் கார்களில் இந்த அம்சம் அதிகரித்து வருகிறது. இது நீண்ட பயணங்களின்போது முன் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு மிகுந்த சௌகரியத்தை அளிக்கிறது. மேலும், ஓட்டுநரின் இருக்கை 10 நிலைகளில் எலெக்ட்ரிக் மூலம் சரிசெய்யக்கூடிய வசதியுடன் வருவதால், ஓட்டுநர் வசதி மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
வயர்லெஸ் சார்ஜிங் & இணைப்பு: மொபைல் சாதனங்களுக்கு சார்ஜிங் கேபிள் மட்டுமே ஒரே வழி என்ற காலம் மாறிவிட்டது. மாடர்ன் கார்களில் உள்ள வயர்லெஸ் சார்ஜிங் வசதி, பல சௌகரியங்களைக் கொண்டு வந்துள்ளது. மாருதி சுஸுகி இ-விட்டாராவிலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. இது கேபிள்கள் இல்லாமல் இணக்கமான சாதனங்களை சார்ஜ் செய்ய வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்பதாலேயே இ-விட்டாரா மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் விஷயத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் தொழிற்நுட்பங்களிலும் இந்த அளவிற்கு பல புதிய அம்சங்கள் உடன் முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கவில்லை. இதன் மூலமாக மாருதி சுஸுகி நிறுவனம் நம்மை ஆச்சிரியப்படுத்தி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









