இன்னும் ரெண்டே நாள்தான்! களத்திற்கு வருகிறது மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார்! நடுக்கத்தில் டாடா, மஹிந்திரா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). இதுதான் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும்.
ஆனால் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் இந்திய அறிமுகம் தொடர்ச்சியாக தள்ளி போய் கொண்டே வந்தது. இந்த சூழலில் ஒரு வழியாக மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் அறிமுக தேதி (Launch Date) தற்போது வெளியாகியுள்ளது.

கார்வாலே தளத்தில் வெளியாகியுள்ள செய்தியின்படி பார்த்தால், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார், வரும் டிசம்பர் 2ம் தேதி (December 2) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.
மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில், லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS - Advanced Driver Assistance Systems), 360 டிகிரி கேமரா, 7 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், ட்ரைவ் மோடுகள், சுஸுகி கனெக்ட் தொழில்நுட்பம் போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் செயல்திறனை பொறுத்தவரையில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன.
அவை 48.8 kWh மற்றும் 61.1 kWh ஆகியவை ஆகும். இதில், 61.1 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 500 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் (Gujarat) மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன.
தற்போதைய நிலையில் அவை இங்கிருந்து ஐரோப்பிய நாடுகள் போன்ற சர்வதேச சந்தைகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் கூடிய விரைவில் இந்திய சாலைகளிலும், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார்களை நாம் பார்க்க போகிறோம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 15-17 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் வருகை, டாடா நெக்ஸான் (Tata Nexon EV), எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV), ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) மற்றும் மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








