டாடாவை முடித்து கட்ட வரும் மாருதி எலெக்ட்ரிக் கார்! விலை இவ்ளோதானா! அப்ப இந்த வருஷம் நமக்கு 2 தீபாவளி!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). இதுதான் மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும்.
மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் இந்தியாவில் ஏற்கனவே தொடங்கி விட்டன. ஆனால் தற்போதைய நிலையில் இந்தியாவில் இருந்து மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மட்டுமே செய்யப்படுகிறது. இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை.

ஆனால் கூடிய விரைவில், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வரும் டிசம்பர் மாதமே, மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 7 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வழங்கப்படவுள்ளன.

இதுதவிர 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 10.1 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகளையும் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கும். அதே நேரத்தில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில், மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படவுள்ளன.
அவை 48.8 kWh மற்றும் 61.1 kWh ஆகியவை ஆகும். இதில், 61.1 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 500 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார், நடைமுறை பயன்பாட்டிற்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 17 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் வருகை, ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) மற்றும் டாடா கர்வ் இவி (Tata Curvv EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதுதவிர டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV), மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e), மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6), எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கும், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் வருகை நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








