ஒருமுறை சார்ஜ் பண்ணா சென்னை-கோவை போய்டலாம்... இந்த விலையில் மாருதியின் முதல் எலெக்ட்ரிக் காரா!!

மாருதி சுஸுகி இ-விட்டாரா (Maruti Suzuki e-Vitara) கார் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டிசம்பர் 2ஆம் தேதியான இன்று அறிவிக்கப்பட்டது போல் தலைநகர் டெல்லிக்கு அருகே குருகிராமில் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கார்கள் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள மாருதி சுஸுகியின் முதல் முழு எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) காராக இது இந்திய எலெக்ட்ரிக் கார்கள் சந்தையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

சுஸுகியின் புதிய சர்வதேச இவி தளமான 'ஹார்டெக்ட்-இ' (HEARTECT-e) சேசிஸில் வடிவமைக்கப்பட்ட இந்த எலெக்ட்ரிக் கார், நவீன வடிவமைப்பு, போட்டித்திறன் கொண்ட ரேஞ்ச் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்திய நுகர்வோரை இலக்காகக் கொண்டுள்ளது. இ-விட்டாரா அதன் சிறப்பம்சமாக பிஒய்டி (BYD) நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் (LFP) பேட்டரி பேக்குகளைப் பயன்படுத்துகிறது.

maruti suzuki e-vitara revealed

இது 49 kWh மற்றும் 61 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 61kWh கொண்ட டாப் வேரியண்ட், ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை ரேஞ்ச் வழங்கும் என மாருதி சுஸுகி உறுதியளிக்கிறது. 543கிமீ ரேஞ்ச் கிடைக்கும் என ARAI சான்றளிக்கப்பட்டுள்ளது. 49 kWh பேட்டரி முன்-சக்கர-டிரைவ் சிஸ்டத்துடன் 142 bhp மற்றும் 189 Nm டார்க் திறனையும், 61 kWh பேட்டரி முன்-சக்கர-டிரைவ் சிஸ்டத்துடன் 172 bhp ஆற்றலையும் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

61 kWh பேட்டரி ஆல்-வீல்-டிரைவ் (All-Wheel Drive) ஆப்ஷனிலும் கிடைக்கும். இது சுஸுகியின் ஆல்க்ரிப்-இ (ALLGRIP-e) சிஸ்டம் ஆகும். இந்த ஆப்ஷனில் 300 என்.எம் வரையிலான டார்க் திறனை பெறலாம். இந்த பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் நகர்ப்புற மற்றும் நெடுஞ்சாலைப் பயணங்களுக்கான திறன் மற்றும் செயல்திறனை வழங்குகின்றன. இ-விட்டாரா, 2,700 மி.மீ வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) உடன் விசாலமான கேபினை வழங்குகிறது.

maruti suzuki e-vitara revealed

மேலும், 5.2 மீட்டர் டர்னிங் ரேடியஸ் நகர்ப்புற ஓட்டுதலுக்கு எளிதாக உதவுகிறது. காரின் முன்பக்கத்தில், கீழ் பகுதியில் உள்ள அடாப்டிவ் ஷட்டர் எதிர்காற்றில் கார் இயங்கும் திறனை மேம்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இது ஆற்றல் திறனை அதிகரித்து, காரை நெடுஞ்சாலைகளிலும், நகரத்திலும் திறம்பட செயல்பட வைக்கும். உட்புற அம்சங்களைப் பொறுத்தவரை, இ-விட்டாரா ஒரு பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.

இதன் உட்புற டாஷ்போர்டு ஆனது 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது. மேலும், வென்டிலேட்டட் இருக்கைகள், எலெக்ட்ரிக்-மூலமாக 10-வழிகளில் அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, 40:20:40 என்ற விகிதத்தில் பிரிக்கக்கூடிய இரண்டாவது வரிசை இருக்கைகள் போன்ற வசதிகளுடன் இ-விட்டாரா வந்துள்ளது.

maruti suzuki e-vitara revealed

இது மட்டுமின்றி, சாஃப்ட்-டச் மெட்டீரியல்கள், கேபினுக்குள் சுற்றிலும் வண்ண விளக்குகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பிரீமியம் தரத்திலான இன்ஃபினிட்டி ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை கேபினின் ஆடம்பரத்தை அதிகரிக்கின்றன. வயர்லெஸ் இணைப்பு மற்றும் அட்வான்ஸ்டு தொழிற்நுட்ப அம்சங்கள் ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு கனெக்டட் வசதிகள் மூலம் சுவாரஸ்யமான பயண அனுபவத்தை உறுதி செய்கின்றன.

பாதுகாப்பு விஷயத்தில், இ-விட்டாரா சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏழு ஏர்பேக்குகள், லெவல்-2 ADAS (Advanced Driver Assistance Systems) தொகுப்பு, 360-டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), EBD உடன் ABS, முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அம்சங்கள் உள்ளன.

maruti suzuki e-vitara revealed

இது நகர்ப்புற மற்றும் நெடுஞ்சாலைப் பயணத்தில் மேம்பட்ட ஓட்டுநர் உதவியையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. இதன் மூலமாக, இ-விட்டாராவுக்கு லத்தீன் NCAP-இல் 4-நட்சத்திர மதிப்பீடு கிடைத்துள்ளது. மாருதி சுஸுகி இ-விட்டாராவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சற்று முன் கிடைத்த தகவலின்படி, இந்தியாவின் பாரத் என்சிஏபி (Bharat NCAP) கிராஷ் டெஸ்ட்டில் இ-விட்டாரா முழு 5-நட்சத்திர மதிப்பீட்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் முன்னிலையில் பெற்றுள்ளது. இது மாருதி சுஸுகியின் நம்பகத் தன்மையையும், இ-விட்டாராவை இந்த பிரிவில் ஒரு வலுவான போட்டியாளராகவும் நிலைநிறுத்துகிறது.

maruti suzuki e-vitara revealed

ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV), எம்ஜி வின்ட்சர் இவி புரோ (MG Windsor EV Pro), டாடா கர்வ் இவி (Tata Curvv EV) மற்றும் மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) போன்ற ஏற்கனவே விற்பனையில் உள்ள எலெக்ட்ரிக் கார்களுக்கு சவால் விடுக்கும் வகையில் இ-விட்டாரா சந்தையில் நுழைகிறது.

மாருதி சுஸுகியின் குஜராத் ஆலையில் இதன் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதிகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. நெக்ஸா டீலர்ஷிப்கள் (Nexa Dealerships) மூலம் படிப்படியாக இ-விட்டாரா விற்பனைக்கு கொண்டுவரப்படும். முதல் தயாரிப்பான இது, மாருதி சுஸுகியின் எலெக்ட்ரிக் வாகனப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 2, 2025, 19:50 [IST]
English summary
Maruti suzuki e vitara electric car launched in india price features range all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X