மாருதி சுஸுகி எலெக்ட்ரிக் காரை பற்றிய ரகசிய தகவல் வெளியானது... விலை இவ்ளோதான் இருக்குமா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). இதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) வாகன திருவிழாவில் மாருதி சுஸுகி இ விட்டாரா கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது ஒரு சில மாருதி சுஸுகி டீலர்ஷிப்களில், இந்த காருக்கு அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

இந்திய சந்தையில் வரும் மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் மாருதி சுஸுகி இ விட்டாரா காரின் வேரியண்ட்களை (Variants) பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி மாருதி சுஸுகி இ விட்டாரா கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது.

Maruti Suzuki e Vitara

அவை டெல்டா (Delta), ஜெட்டா (Zeta) மற்றும் ஆல்பா (Alpha) ஆகியவை ஆகும். இந்த அனைத்து வேரியண்ட்களிலும் 2 வீல் டிரைவ் சிஸ்டம் ஸ்டாண்டர்டாக வழங்கப்படவுள்ளது. அதே நேரத்தில் டெல்டா வேரியண்ட்டில் 48.8 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. எஞ்சிய 2 வேரியண்ட்களிலும் 61.1 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது.

இந்த 3 வேரியண்ட்களுமே 7kW ஏசி சார்ஜர் மற்றும் 70kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் ஆகியவற்றுக்கு சப்போர்ட் ஆகும் என கூறப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ள இந்த காரில், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ட்வின் டிஸ்ப்ளே வசதி கொடுக்கப்படவுள்ளது.

Maruti Suzuki e Vitara Side Design

இதுதவிர பனரோமிக் க்ளாஸ் ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், 360 டிகிரி கேமரா, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 7 ஏர்பேக்குகள் மற்றும் லெவல் 2 அடாஸ் ஆகிய வசதிகளும் இந்த காரில் இடம்பெறவுள்ளன.

இந்திய சந்தையில் டாடா கர்வ் இவி (Tata Curvv EV), ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric), எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV), எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) மற்றும் மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) ஆகிய கார்களுக்கு போட்டியாக மாருதி சுஸுகி இ விட்டாரா களமிறங்கவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 17 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 22.50 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம்.

இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும். எனினும் இந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, January 30, 2025, 18:27 [IST]
English summary
Maruti suzuki e vitara electric car variants explained all details here
மேலும்... #maruti suzuki #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+