போட்டி நிறுவனங்களின் ஈரக்குலையை நடுங்க வைத்த மாருதி! நாடே எதிர்பாத்த விலை குறைவான எலெக்ட்ரிக் கார் வருகிறது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). இதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும்? என்ற கேள்வி மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்த சூழலில் ஒரு வழியாக வரும் டிசம்பர் 2ம் தேதி (December 2), மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலால் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காருக்காக காத்து கொண்டிருந்த இந்திய வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Maruti Suzuki e Vitara

மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 7 ஏர்பேக்குகள் வழங்கப்படவுள்ளன. மேலும் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 4 சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features) மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கும்.

மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படவுள்ளன. அவை 49 kWh மற்றும் 61.1 kWh ஆகியவை ஆகும். இதில், 49 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) சுமார் 345 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maruti Suzuki e Vitara Side View

மறுபக்கம் 61.1 kWh பேட்டரி பொருத்தப்பட்ட மாடலானது, ஃப்ரண்ட் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என 2 ஆப்ஷன்களில் கிடைக்கும். இதில், ஃப்ரண்ட் வீல் டிரைவ் மாடலின் டிரைவிங் ரேஞ்ச் சுமார் 425 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலும், ஆல் வீல் டிரைவ் மாடலின் டிரைவிங் ரேஞ்ச் சுமார் 395 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் வருகை, இந்திய சந்தையில், டாடா கர்வ் இவி (Tata Curvv EV), ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV), மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இன்னும் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும் கூட, இந்தியாவில் இருந்து சர்வதேச சந்தைகளுக்கு மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஏற்றுமதி பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 17 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என நாங்கள் கருதுகிறோம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலையில் களமிறக்கப்பட்டால், மாருதி சுஸுகி இ விட்டாரா விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 11, 2025, 19:40 [IST]
English summary
Maruti suzuki e vitara launch date december 2 check all details here
மேலும்... #maruti suzuki #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+