டாடா இப்பவே வெடவெடத்து போயிருக்கும்! மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் நாளை அறிமுகம்! விலை இவ்ளோதானா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) இதுதான். மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும்? என்ற எதிர்பார்ப்பு மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

ஒரு வழியாக மிக நீண்ட காத்திருப்பிற்கு பிறகு, மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார், நாளை (டிசம்பர் 2) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதில், மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படவுள்ளன. அவை 48.8 kWh மற்றும் 61.1 kWh பேட்டரிகள் ஆகும்.

Maruti Suzuki e Vitara

இதில், 61.1 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 500 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபக்கம் 48.8 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் எவ்வளவு இருக்கும்? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் இந்த பேட்டரியின் பவர் அவுட்புட் 144 பிஎஸ் மற்றும் 192.5 என்எம் டார்க் ஆக இருக்கும்.

அதே நேரத்தில் 61.1 kWh பேட்டரியின் பவர் அவுட்புட் 174 பிஎஸ் மற்றும் 192.5 என்எம் டார்க் ஆக இருக்கும். மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் பேட்டரிகளை டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்து கொள்ள முடியும். டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், வெறும் 50 நிமிடங்களில், 80 சதவீதம் வரை பேட்டரியை நிரப்பி விட முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Maruti Suzuki e Vitara Side View

மறுபக்கம் வசதிகளை (Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, 7 ஏர்பேக்குகள், 10.1 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்றவை எல்லாம் இந்த காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கும்.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை அனேகமாக வெறும் 15-17 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது நாளைதான் அறிவிக்கப்படும்.

இந்தியாவில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் தற்போதைய நிலையில் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு மட்டுமே மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் இந்திய சாலைகளிலும் இந்த எலெக்ட்ரிக் காரை நாம் பார்க்க போகிறோம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா கர்வ் இவி (Tata Curvv EV) மற்றும் டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரின் வருகை, விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e), மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6), எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV), எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கும், மாருதி சுஸுகி இ விட்டாரா, விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, December 1, 2025, 13:58 [IST]
English summary
Maruti suzuki e vitara launch tomorrow expected price driving range features all details here
மேலும்... #maruti suzuki #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+